Thursday 7 April 2016

மண் வாசம்

மண் வாசம் அது என்றும்
கிராம மக்களின் உடலிலே
ஒட்டிக் கொண்ட சுவாசம்.
அலை கடல் காற்ரோடு தாலாட்டும்.
அதில் விழுந்தெழும் தென்றலும்
நம்மை சீராட்டும்.

சுற்றி உள்ள காடும் பசுமை காட்டும்.
அந்தக் காட்டுக்குள்ளே உள்ள குளத்து
மீனும் சுவையூட்டும்.
அல்லிக் குளத்தில் துள்ளிக்
குதித்து போடலாம் ஆட்டம்.
அந்த நேரம் பார்த்து பெற்ரோர்
வந்தால் எடுப்பதோ ஓட்டம்.

குத்தரிசி சோறும் ஒற்றைப்பனங் கள்ளும்.
மெச்சுக் கொண்டி உண்டதும் உறக்கம்.
உடல் வருத்தி உழைக்கும் விவசாயிக்கு
நிம்மதியான தூக்கம்.
குடிசை வாழ்வோ அவனுக்கு சொர்க்கம்.

குயில் ஓசை கொடுக்கும்
சேவல் கூவி எழுப்பும்.
காலை நேரம் என்று இயற்கையே
அவனை உசுப்பி எழுப்பும்.
எத்தனை ஆண்டு பட்டணம் வாழ்ந்தாலும்
இத்தனையும் மறந்து விடுமோ??
அனுபவித்தவன் நெஞ்சம்.

சுவர் எழுப்பிய நிலத்துக்குள்ளே இல்லம்
பூட்டிய இல்லத்துக்குள்ளே எல்லாம்
தண்டனை இல்லாத கைதியாகவே நாளும்
வாழ்கை நடாத்தும் பட்டணத்தாருக்கு
தெரியுமோ?  மண் வாசனை  ஐயோ
பாவம் அவர்களின் நுகர் சுவாசமே.

      

No comments:

Post a Comment