பெண் என்றால்  கிள்ளுக்கீரையாக 
எண்ணுவோர்அதிகம் உண்டு தான்.
பெண் துணிந்து எழுந்தால் 
சீறி வரும்  அலையைக் கிழித்தும் 
நுழைவாள் என்று கூறினால்.
ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்ட 
ஆண்களும் குறைவுதான். 
எழுத்தால் எழிச்சி  கண்டு நினைச்ச
படியே  வெற்றியை கைப் பற்றிய 
பெண் மலாலா.
மரண வாசல் வரை சென்று 
திரும்பியும் தான் கொண்ட 
இலக்கை கை விடாது வென்று
விடுவேன் என்ற உறுதியை 
மனதில் கொண்டு எதிர்த்து
போர் செய்தாள் எழுத்துக்களால் .
 
இதை சொன்னால் பலருக்கு 
ஏனோ எரிச்சல். 
அது அல்லவோ துணிச்சல். 
எத்தனை  விருது எத்தனை பாராட்டு
பத்திரிகையில் பக்கம்  பக்கமாக 
புகழ் பாட்டு இவைகளை பெறவே
மலாலா எப்பாடு பட்டு இருப்பாள்
என்று உணர்ந்து பார் புரியும் 
பெண்ணை அடிமை சாசனமாக
விவரிக்கும் ஆண் மகனே.
பெண் துணிந்தால் வென்று விடுவாள் 
துணியத்தான் துணிவு இல்லாமல்
நின்று விடுகின்றாள் பெண் என்றால்
பேயும் இரங்கும் அது அக் காலக் கதை
பெண் என்றால்  இடியும் நடுங்கும்
இனிமேல் காணப்போகும் கதை. 
 
No comments:
Post a Comment