Friday 22 April 2016

வேதனையான வாழ்வு

பொன்னாரம்  பூவாரம் இந்தப் பெண்
வாழ்விலே ஆனாலும் கண்ணோரம்
நீர் ஓடை நிலையானதையா.

மெய்யன உறவெல்லாம்  பொய்யாகப்
போனதையா.
நிறுத்தாத பதிவாடல் கண்டு வருத்தம்
தோனுதையா.

போலியான வேலி கட்டி பொய்யான
செடி வளர்க்கான் ஒருவன் அதை
மெய்யனப்பார்த்து ரசித்துக் கை
கொட்டிச்சிரிக்கின்றது ஒரு கூட்டமையா.

வாய்க்கு வந்த படி பாடுகிறான் ஒருவன்
எழுந்து ஆட அதற்கும் ஒரு கூட்டம்
சேருதையா.

பெண்ணுக்கோ சோதனைகள் தொடர்ந்து
வந்து துயரங்கள் பதிவாகிப்போனதையா.
விலை உயர்ந்த. ஆடையும் ஒலி கொடுக்கும்
நகைகளும் வெளிப்பார்வைக்கு என்று
முடிவானதையா.

உள்ளே சோகக் கடல் புரண்டாடுதையா
மனவிம்மல்கள் நில்லாமல் உருண்டு
விளையாடுதையா.

பொய்க்கும் போலிக்கும் புரட்டுக்கும்
இங்கே மதிப்பு அதிகம் என்றானதையா.
உண்மையான அன்பும் பாசமும் நம்பிக்கை யும்
மிதிபட்டே மாண்டு மறையுதையா.

        

No comments:

Post a Comment