Sunday 17 April 2016

தெய்வம் எதில் உண்டு

துன்பம்  நெருங்கையில் இறைவனே
இல்லை என்று
துப்புகிறான் திட்டுகிறான் தெருவில் நின்று.

இன்பம் நிலைத்தால் செல்வம் செழித்தால்
கும்பிடு போடுகிறான் குட்டிய படியே குந்தி
எழும்புகின்றான் கல் சிலை முன் நின்று.

கல்லானலும் கடவுள் என்ற கோட் பாடு
இந்துக்களுக்கு உண்டு.
ஆனால் தன் கடமை மறந்து தாயை வெறுத்து
கடவுளை வணங்குவதில் என்ன பயன் உண்டு.

அகக் கண்ணால் இறைவனை நேசி
உன் இரு கண்ணால் தாயை கனிவோடு நேசி
உள்ளத்தால் உறவை நேசி.
உண்மையை உயிராய் நேசி.
உழைப்பை உண்மையாக நேசி.
இவைகளில் தான் இறை அருள் உண்டு
சிலை அருகில் நின்று புலம்பி வந்தால்
ஏமாற்றமே என்றும் உண்டு.

  

No comments:

Post a Comment