Friday 22 April 2016

தாய்ப் பாட்டு

சின்னச் சின்ன முத்துக் கொலுசு
சேர்த்து வைத்த சில்லறையைக் கொண்டு
சின்னக் கண்மணியின் சின்னப் பாதத்துக்கு
நான் போட்டு அன்ன நடை பயின்று தருவேன்.
பூ மகளே நீ உறங்கு  சின்ன விழி தான் மயங்கி.
பூ மகளே நீ உறங்கு  சின்ன விழி தான் மயங்கி.
ஆராரோ ....... ஆரிவரோ .... ஆராரி ... ராரிரரோ.

ஊரார் ஒன்று கூடும் ஊர் திருவிழாவில்
மகளே நான் மான் பொம்மை வாங்கித்தந்து
உன்னை மான் போலே துள்ளி குதிக்க வைப்பேன்
மல்லிகையே நீ உறங்கு  விழி மீன் தான் முடி உறங்கு.
மல்லிகையே நீ உறங்கு  விழி மீன் தான் மூடி உறங்கு.
ஆராரோ .... ஆரிரரோ ..... ஆராரி  ஆரிவரோ.

சுத்தி  சுத்தி  சுட்டு வைத்த சென் நிறத் தேன்
குழலும் சேர்த்து வாங்கித்தருகிறேன் ஊதிக்
கட்டிய பலூண்களும் கையில் வச்சிக்கத் தாரேன்.
சின்னப் புறாவே நீ உறங்கு உன் பொன்வண்டுக்
கண் உறங்க சின்னப்புறாவே நீ உறங்கு  உன்
பொன்வண்டுக் கண் உறங்க  ஆராரோ.
ஆரிரரோ ....... ஆராரிராரரோ ... ராரரிராரரோ.

          

No comments:

Post a Comment