என் கன்னம்  கடிக்க நீ வரவேண்டும்.
என்று நாளும் பொழுதும் நான் 
போட்ட கணக்கை கண்டுக்காமலே
முரண்டு பிடிக்காயோ கருவாப்பையா.
நீ இறுக்கி அணைக்க இழுக்கும் 
போது என் வளையல்கள் நொறுங்காமல் 
நீ பயந்து கொண்டே இழுக்க வேண்டும் 
அதை நான் ரசிக்க வேண்டும் என்று
எனக்குள்ளே ஆசை உனக்கில்லையோடா 
கருவாப்பையா. 
நாம் இருவரும் அணைத்துக் கொண்டு
இருக்கும் வேளையிலே தென்றலும்
நுழைய வழி இன்றி முட்டி மோதி 
திரும்ப வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு 
உமக்கு  இல்லையோடா கருவாப்பையா.
நீ உழைத்து உடல் வேர்வையோடு 
வந்து நிற்கும் போது உன் மார்வினிலே
முகம் புதைத்து உன் வியர்வையை நான் 
நுகர்ந்து காணும் இன்பம் அந்த நிமிடமே
சொர்க்கம்  என் பக்கமடா கருவாப்பையா.
உன் அழகு முகத்துக்கு இத் தாடி 
எதற்கடா என்று கூறியபடியே நான் 
பிடித்து  இழுக்க வேண்டும் 
போடி என்று நீ பிடித்து தள்ளவேண்டும் .
நான் அழவேண்டும் நீ வந்து 
 மீண்டும்  கெஞ்ச வேண்டும் 
நானோ தாடி மேல் வெறுப்புக் காட்ட வேண்டும்
நீயோ கோபத்தில் மெழுகாய் எரியவேண்டுமடா
கருவாப்பையா,
ஐயோ ஐயோ மெய்யா மெய்யா
இவை என் ஆசையடா பொய்யா
பொய்யா போகாது நீ பார்த்துகோடா 
உண்மையான பாசத்தையும் காதலையும்
கொடுத்து எடுத்துக்கோடா என் கருவாப்பையா......
கருபாப்பையாயாயா.
 
No comments:
Post a Comment