Sunday 17 April 2016

பாப்பா பாட்டு

கதை கூறக் கற்றுக்கொள்  பாப்பா.
காவியம் படித்தால் அர்த்தம் புரிந்து படி பாப்பா.
கவிதை எழுத பழகி விடு பாப்பா.
காலத்துக்கு ஏற்றால் போல் வாழ்ந்து விடு  பாப்பா.

ஆடம்பரத்தை அளவோடு வைத்துக்கொள் பாப்பா.
ஆனாலும் அகந்தை மறந்தே வாழ்ந்து விடு பாப்பா.
அன்பை வளர்த்து விடு பாப்பா.
அறிவை பெருக்கி விடு பாப்பா.

கூடி வாழ்ந்தால் குருவிக் கூடு பாப்பா.
கூடி விளையாடினால் ஜோர (டி) பாப்பா.
கூனிக் குறுக வைக்கும் செயலை செய்யாதே பாப்பா.
கூண் விழுந்த பின்னும் துணிந்து நில் பாப்பா.

உன் உயர்வு கண்டு உலகம் போற்ற வேண்டும் பாப்பா.
உன் அன்னை உள்ளம் குளிரவேண்டுமடி பாப்பா.
உண்மையை உரக்க உரைத்து விடு பாப்பா.
உயர்வான உள்ளங்களை மதித்து விடு பாப்பா.

உலகம்  ஆயிரம் கூறுமடி பாப்பா.
அன்னைக்கு முன் அனைத்தும் சிறியதடி பாப்பா.
ஆனாலும் இவ் உலகில் வாழ்ந்தே ஆகவேண்டுமடி பாப்பா.
ஆராய்ச்சிகள் அதிகரிக்குதடி பாப்பா.
இருந்தும் ஆத்மாக்கோ அமைதி ஆலயத்தில் தானடி பாப்பா.

வாய் வழி வாழ்த்தி மனதாலே போற்றடி பாப்பா.
மனக் கிடங்கில் கவலைகள் நிறைந்தாலும் பாப்பா.
பொறாமைக்கு இடம் ஒதுக்காதே பாப்பா
இவ் வரிகளைப்  படித்து உன்னுள் எழும் கேள்விக்கு
பதில் காணவே   துடிப்போடு எழு பாப்பா.

            

No comments:

Post a Comment