Wednesday 27 April 2016

மேலோக உரையாடல்

பூ உலகிலே பூமிமேலே வாழும்
மனிதர்கள் எப்படி என்று கால
தேவைனைக் கேட்டேன்.

காலத்தால் கணிக்க முடியாத
கொடியவர்களே வாழ்கிறார்கள்
காலம் முடியும் தறுவாயிலும்
கொடுமைகள் புரிகின்றார்கள்  (என்றான் )

செல்வந்தர்களின் சொல்
வாக்கு எப்படி  என்றேன்.

சொல்லச் சொல்ல இனிக்கும்
சொல்லி முடிப்பார்கள் என்றான்.

சொன்ன வாக்கை நிறைவேற்றி
வைத்தது உண்டா என்றேன்.

சொன்ன வாக்குறுதியை காற்றில்
விட்டு விட்டு தன் இல்லத்தை
சொர்க்கம் ஆக்கியவர்களே
அதிகம் உண்டு என்றான்.

அறிவு என்று ஒன்று இல்லாத
மனிதர்களா அவர்கள் என்றேன்.

அறிஞர்களும் கவிஞர்களும்
விஞ்ஞானினியும் அஞ்ஞானியும்
உண்டு ஆனாலும் மடையர்களைத்
தான் நான் அதிகம் கண்டேன் என்றான்.

வேறு என்ன கண்டு வந்தீர்
கூறும் அனைத்தையும் என்றேன் .

நீர் இன்றி ஆகாரம் இன்றி
தெருவோரமாக மழலைத்
தொழிலாளியைக் கண்டேன்
கண்ட நொடி மனம் நொந்தேன்.

கவலை கண்ணீரோடு காதலர்களைக்
கண்டேன் சாதி மத வெறியர்களின்
பொல்லாத கடும் கோபம் கண்டேன்.

திட்டித்தீர்க்கார்கள் பாதை ஓரம்
நின்று கால தேவனாகிய என்னையும்
உயர்ந்த. ஜாதியின் மரண நேரத்தில்
கீழ் ஜாதியையும் இணைத்து காலத்தை
முடித்துக் கொண்டேனாம் .

உயர் ஜாதியின் உடல் அருகே
கீழ் சாதியின் உடலும் உண்டாம்
கையில் சிக்கினால் பக்கத்தில்
என் உடலும் உண்டு என்று முட்டி
மூதி ஓடி வந்து நின்றேன் உன்
முன்பு இதுதான் பூலோக வாழ்வு
என்னை நம்பு என்றான்...../////

       

No comments:

Post a Comment