Sunday 1 May 2016

சோக்காளி மச்சான்

சோக்காளி என் மச்சான்.
சோக்காத்தான் சொக்க வைக்கான்.
சொக்கா போட்டு நடை போட்டான்.
சொக்கி நிற்கும் என்னை கண்ணாலே
எடைபோட்டான் .....////

வேளாண்மைக்கு போட்ட வேலி
தாண்டக் குதிக்கான் .
அத்து மீறி கட்டியணைக்கத் துடிக்கான்.
எல்லாமே எனக்கு அத்துப்படி என்று
சொல்லிச் சிரிக்கான் ...../////

கன்னம் சிவந்த பிள்ளை
கறுத்த மச்சம் பதித்தபிள்ளை
நல்ல செய்தி சொல்வேன் நில்லு பிள்ளை.
என்று  நல்லாவே மச்சான் கதை
அளக்கான் ...../////

வாடி வாடி ரதியே வாங்கித்தருகிறேன்
ரோசாப்பூ ரவுக்கயடி என்றான்.
வாயாடி பெத்த மகளே வாயேன்டி
என்று கெஞ்சி நின்றான் .....///

மிஞ்சி போட நாள் பாரு மச்சான்
என்று வஞ்சி நான் நடை போட்டேன்
அங்கிருந்து சாக்கடித்தது சோக்காளி மச்சான்
நெஞ்சில் அவன்  சிலையாகி
அங்கேயே நின்றான் .....////

                

என்ன சொல்வேன்


போஞ்சி எதற்கு
பீஞ்சி எதற்கு
பரட்ட முடியல.......\

இந்தக் கஞ்சம்
புடிச்ச மாமனோடு
குடும்பம் நடத்த
முடியல...............\

பச்ச மிளகாய்
ஊசி மிளகாய்
காரம் ஏறல.........\

இந்த முருகன்
பத்தன் முறைப்பு
தாங்க முடியல........\

கதிரவன் சுடர் ஒளி
எரிவாயு தீப் பொறி
சூடு ஏறல............\

இந்த டாச்சர்
பிடித்த மாம்
தொல்லை தாங்க
முடியல...........\

வெங்காயம் நறுக்கி
பூண்டு அரைத்து
நான் கண்ணைக்
கசக்கல............\

இந்த வஞ்சம்
புடிச்ச மாமன்
போடும் கூத்து
சகிக்க முடியல.....\

மட்டன் போல்
வறுத்து எடுக்கான்
கருவாடு போல்
வாட்டி எடுக்கான்.......\

கோழிக் கொழம்பு
போல் கொதி
கொள்ளுது கோபம்
என்னுள்ளே..........\

பச்சரிசி சாதம்
போல் சிரித்து
நெய் விட்ட சாம்பார்
போல் வாசம் வீசி
இனிக்கும் பாயாசம்
போல் இனியைமான
வாழ்வாக வாழ்ந்த
பெண்மை நான்..........\

இன்று மண வாழ்வு
என்னும் பெயரில்
மாமா என்ற கை
விலங்கிடம் மாட்டி
வெயிலில் வாடும்
மலராட்டம் நீர் இல்லாம்
வெம்பும் வெள்ளரிப்
பிச்சு போல் வெம்பியே
போகின்றேன் விம்மியே
அழுகின்றேன்.............\

 

வாழ்க்கை வரமா சாபமா???

வாழ்க்கை ....வரமா? சாபமா? ஆராய்ச்சியில்
இறங்கியோர் பலர் இன்று இல்லை
வாழ்க்கை ....வரம் என ஆணித்தனமாக
சொல்லும் மனிதர்களும் இல்லை
வாழ்க்கை ... சாபம் தான் என்று சட்டசபையில்
ஓங்கி குரல் ஒலிக்கவும் இல்லை
வாழ்க்கை ...என்பதை இறுதி வரை வாழ்ந்து
முடிக்கலாம் என உறுதி மொழியும் இல்லை.

வாழ்க்கையை ... எப்படியும் வாழலாம்
என்பவனுக்கு வரம்.
வாழ்க்கை ..... என்றால் இப்படித்தான்
வாழ வேண்டும் என்பவனுக்கு சாபம்.
வாழ்க்கைக்கு..... வரை அறை
வகுத்து வாழ்வபனுக்கு அது இன்பம்.
வாழ்க்கையில் ... வலிகளை
சுமப்பவனுக்கு அது துன்பம்.

வாழ்க்கையிலே ... சாதித்துப்பார்
சாதனையை யோசித்துப் பார்.
வாழ்க்கை .... வரம் எனப் புரியும்
அழகாய் தெரியும்.

வாழ்க்கையில் .. எல்லாம்
அனுபவிப்பவனுக்கு அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ....நல்ல நட்பின்
உறவு கிடைத்தால் அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ..நினைப்பதெல்லாம்
நடந்து முடிந்தால்.அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ...நமக்கு என்று ஓர் இடம்
மக்கள் மனதில் கிடைத்தால் அது
சொர்க்கமோ சொர்க்கம்.

வாழ்க்கையில் ...நினைப்பது
ஒன்று நடப்பது ஒன்றாக அமைந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோகமே நிரந்தரம்
என்றால்அது துக்கம் .
வாழ்க்கையில் ...விரத்தி துரத்தி
வந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோதனையே தொடர்
கதையானால் அது துக்கம் .
வாழ்கையில் ... அனைத்தும் கிடைத்து
பிள்ளை செல்வம் கிடைக்கா
விட்டால் துக்கத்தின் மேல் துக்கம்.

வாழ்க்கை .... வரம் என்பான்
துன்பம் நெருங்காதவன்
வாழ்க்கை .... சாபம் என்பான்
வேதனையில் மூழ்கிப்போனவன்.

வாழ்க்கை ....வரமா? மாபமா?
என்றால் விடிவு இல்லாச்
சாபம் முடிவு இல்லா வரம்.

வாழ்க்கைக்கு .. விடை தேடி
புறப்பட்டால் இறுதி வரை கிடைப்பது
கேள்விக்குறி போல்  நாமம் .

வாழ்க்கையில் ... நாம் பெற்ற வரம்
மனிதனாக பிறப்பு எடுத்த வரம் ஒன்றேதான்
என்பேன் நான்.......////