Sunday 31 January 2016

ஏங்கும் ஏந்திழை


காதல் இது காதல் இது
கன்னி கொண்ட காதல் இது
காத்திருக்கச் சொல்லி விட்டு
போன மன்னன் எங்கே...............\

தூது சென்ற வெண் புறாவும்
துணையோடு வந்து நிற்க
தூது விட்ட பெண் மனமோ
ஏக்கம் கொண்டது இங்கே..\

கதவையும் திறந்து வைத்து
கன்னி மனசையும் திறந்து
வைத்தேன்............\

பொன்னின் செல்வன்
போனது எங்கோ
பொன்னான. அவன்  பாதம்
படுவது எப்போ..........\

பட்டுச் சேலை கட்டி
கசங்காமல் காத்திருக்கேன்
பட்டு மெத்தையிட்டு
கலையாமல் காத்திருக்கேன்..\

பாச வலை விரித்து
என்னைப் பிடித்தவரே
பாசாங்கான பாசம்
காட்டி என்னைப் பதற
விட்டவரே............\

நான்கு பக்கமும் சுவர்
அடைப்பு நடுவினிலே நான்
அமர்ந்திருக்க
நாளா பக்கமும் சுத்துதையா
என் மூச்சுக்காற்று உன்
பேச்சைத் தேடி...........\

மஞ்சள் வெயிலும்
மாலையாகிப் போனதையா
மஞ்சள் முகமும் வாட்டம்
காட்டுதையா...............\

நீதான்  தஞ்சம் என்று
என் நெஞ்சில் உன்
நினைவை விதைத்தேன்
நீதான் என் உலகம்
என்று கனவில் மிதந்தேன்..\

போகாதே  போகாதே என்
உள்ளத்தை கொல்லாதே
உணர்வை  வதைக்காதே
போதும்  போதும்  உன்
விளையாட்டு என் எதிரே
வந்து நில்லு என் உயிரே.....\

      

காட்டு ராணி

தெருவேரமாகக் கூத்தாடி
துட்டுக் கறப்பேன்
தொட்டுப் பேச வந்தால்
விட்டுப் பிடிப்பேன்.......\

காட்டுக் குயிலை
போட்டிக்கு அழைப்பேன்
காட்டுப் பூனையை
உச்சு கொட்டி சுவைப்பேன்.....\

கிளிக்கு என் மொழி
கற்றுக் கொடுப்பேன்
கிளியோடு சேர்ந்து
நானும் கனி பறிப்பேன்.....\

மானோடு துள்ளுவேன்
மயிலோடு விளையாடுவேன்
பாம்புக்குப் பல் புடுங்குவேன்
பக்குபமாகத்
தடவிக்கொடுப்பேன்.........\

காட்டுக்கு  ராணி நான்
காட்டிப் பிழைக்காத
வானி  நான்........\

இயற்கையுடன்
இணைந்தே இயன்ற
வரை வாழ்வேன்.......\

இளக்காரமாகப்  பார்த்தால்
எய்திடுவேன்  ஈட்டி
ஐயோ    ஒய்யோ என்று
ஓடிருவான்  நோட்டி........\

   

Saturday 30 January 2016

ஏங்கும் மனம்

புதுவருடம்
தொடங்கியது
மகிழ்ச்சியாக.

பொங்கல்
பொங்கியது
இகழ்ச்சியாக.

ஆனால் உன்
மௌனம் மட்டும்
தொடர்கின்றது
தொடர்ச்சியாக.

என் மனமோ
தினமும்
எனக்குள்ளே
கொடுக்கின்றது
கவலை மேல்
கவலையாலே
கொடைச்சல்களாக.

புது  உடைமை
புது தென்பு
புது உறவு உண்டு
புதுமை கண்ட பின்னும்
புரட்டிப்போடுது மனம்
உன் சின்ன முகத்தின்
புகைப்படம்  கண்டு.

புரம் தள்ளி பேச வில்லை
நான் புரக்கணித்து
நடக்கவில்லை
புரிந்து கொள்ள உமக்கு
புது வருடமும்  உன்
மனதை திறக்கவில்லை.

வருடி எடுக்கிறது
உன் நினைவு
வாட்டி எடுக்கிறது
உன் நினைவு
கவலையை கூட்டி
விடுகிறது
உன் நினைவு.
உன்னிடம் காட்டிக்
கொடுக்க. மறக்கின்றது
என் பயந்த மனமது .....///

      

மனிதபிமானம்

(தடாகத்தின் போட்டிக் கவிதை)

மானிடனே உன் மனிதம் எங்கேடா.
மாண்டு விட்டதோ நீ பிறக்கும்
போதே அங்கேயேடா   இல்லை
உன் மரித்துப் போன மனம் கண்டு
கூடவே வர மறுத்து விட்டதோடா

பரந்த உள்ளத்திலே சிறந்த மனிதத்தை
இருக்க விடாது பறக்க விட்டு  நீ
உலகயே வலம் வருவது  நியாயமோடா.
கிளை விட்டு கிளை பாயும் குரங்குப் புத்தி
நாடு விட்டு நாடு சென்ற பின்னும்
உன் கூடவே வருவது அநியாயமடா.....///

மனித உடலையும் கூறு போட்டு
விற்கான் அவனின் அறிவையும்
விலை பேசி விற்கான்  துடிக்கும்
இதயத்தை திருடுகிறான் மாற்றான்
கரத்திலே ஏற்றுகிறான் பணத்துக்கு
வாயை பிளக்கான்  அப்போது எழுந்து
விடவில்லை மனிதம்  விழுந்து விட்டது
பணத்தைக் கண்டு ........//////

பிறர் அறிவை வழித்து எடுத்து
தன் நலத்துக்கு விற்று  தலை
நிமிர்ந்து நடக்கான் ஒருவன்
அவனுக்குப் பெயர்  தலைவன் ....///

உழைத்தவன் வெயர்வை வாடையோடு
அமந்திருக்க. அவன் உழைப்பைக்
கொண்டு சந்தன வாடையோடு
பவனி வருகிறான் திருடன் ...../////

இரக்க குணம் இல்லா அரக்க
மனிதர்கள் இடத்தில் எங்கே
குடியிருப்பது மனிதம் ......////

பேராசைக் கானின் சிறையில்
அடைபட்டு விட்டது மனிதம்.
பதவிக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவன்
தட்டி விட்டு விட்டான் மனிதத்தை .....////

வாய் பேச்சை காற்றில் விட்டு
பணத்தை அள்ளத் துடிப்பவன்
கனப்பொழுது  மனிதத்தை  கண்டு
கொள்வதுமில்லை  தொட்டு
விடுவதுமில்லை ......////

மனிதம் என்ற ஒன்று வாழைப்
பழத்தின் தோல் போல் உரித்து
குப்பையிலே  எறியபட்டு விட்டது
போலி முகங்கள் நிலையானதால்
மனிதனைக் கண்டு மனிதமே
ஒதிங்கி விடுகிறது ...../////

பத்துக்குப் பத்து வஞ்சம் நிறைந்த
நெஞ்சம்  அதில் அமர்ந்து
விட்டது பொறாமை  தான்
கொஞ்சம்   மனிதம் என்ற வார்த்தைக்கு
ஏற்பட்டு விட்டது தொடர் பஞ்சம் ....////

உள்ளம் எல்லாம் முள்ளாக
மாறியதால் நல் உள்ளம்
தேடி காற்றில் அழையுது
மனிதம் 
அனாலும்  ஒரு சிலரிடம்
காணப்படுகின்றது  இந்த மனிதம்
மனிதம் நிறைந்தவருக்கு இல்லை
வாழ்விலே நற் பெயர் நிம்மதியான
ஓர் வாழ்கை  மரியாதை  இவையாலே
அவர் வாழ்கையிலே தொல்லை
மனிதம் மனிதனாக வாழ்வோரை
மாற்றும் வெற்றிப் படி ஏற்றும் .
என்றோ ஒரு நாள் என்று நம்படா
மனிதனே  நீயும்  ...////

வித்தகன்

இசையாலே என்னை
மயக்கிய கண்ணா.......\

இந்த  ராதைக்கோ
தூக்கம் இனி
ஏதடா கண்ணா........\

உன் இதழ் வழி
பிறக்கும் காற்றும்
புல்லாங் குழல்
வழியாகவே வந்து
என் இதய அறையை
நிறப்பியதடா
கண்ணா  என் கண்ணா......\

கண்ணா நீலவண்ணக்
கண்ணா நீ எனக்கு
கண்ணானக் கண்ணனடா.....\

உன் குழல் ஓசைக்கு
ராதை நான் கீதம்
இசைக்க வேண்டும்
கண்ணா இதை நாடும்
கேட்டு ரசிக்கவேண்டும்
மன்னா என் கண்ணா .......\

இந்த ராதை உனக்கு
மட்டும் சொந்தடா
நீ யாருக்கு சொந்தமடா
கண்ணா...........\

ராதை நான் கோபம்
கொண்டால்  பெரும்
ரகளை என்று ராகத்தாலே
என்னை மயக்கும்
வித்தகனே கண்ணா
உன் முகம் காணத்தானே
என் கண் உள்ளதடா
மன்னா. என் கண்ணா...........\

இந்திய ஆட்சியின் திறமை

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்ந்து கொண்டு
இருக்கும்
முதல்வர்களே........\

நீங்கள்  படித்துக்கொடுத்த
பாடம் வீதியில்
படுத்திருப்பதைப்
பாருங்களே................\

படிக்கும் வயதில்
குடிக்கான்
பாடத்தை நினைக்கும்
பருவத்திலே தன்னையே
மறக்கான் போதையில்
மிதக்கான்.................\

குடிமக்கள்
என் குடிமக்கள்
என்று உங்கள்
முழக்கம் விளக்கம்
கேட்டால்  ஓட்டம்
நாளுக்கு நாள்
அதிகரிக்கினறது
குடிகாரக் கூட்டம்........\

வீதிக்கு ஒரு கோவில்
அங்கே எத்தனையோ
போலிப் பூசாரி..........\

தெருவுக்கு ஒரு
ஓரம் விபச்சார
விடுதி இங்கும்
நடக்கின்றது
மழலைகள்
வதைப்பு.......\

திரும்பும் திசை
எல்லாம் மதுக் கடை
திசை மாறிப்
போகின்றனர்
இளைய சமுதாயம்
சாக்கடையாய்..........\

தாய்  நாடு  தமிழ் நாடு
தள்ளாடுகிறது இதைக்
கண்டும் காணாமல்
அரசியல் கொண்டாடுகிறது.....\

ஐயா ஆட்சியில்
ஏறியது விலை
அம்மா ஆட்சியில்
இறங்கியது விலை
குஷியில் குடிகாரன்.....\

குலம் வாழ  குணம் வாழ
குடிமக்கள் நலமாக வாழ
நாடு போற்ற உலகம்
பார்க்க உள்ளம் மகிழ்ந்த
அக்காலத்தில் ஆட்சியில்
அமர்ந்த நல்ல மனிதர்கள்
இருந்திருந்தால் ஏக்கத்திலே
பைத்தியம் பிடித்திருக்கும்
இக்  காலத்தின்  அரசியலைக்
கண்டு............\

 

Thursday 28 January 2016

தாயா தாரமா

உருவில் உயிர் கொடுத்து
உதிரத்தை பாலாக கொடுத்து
அடிவயிறு தடவி ஈன்று
எடுப்பவள் தாய்.

உள்ளத்தில் இடம் கொடுத்து
உணர்வில் உயிர் கொடுத்து
உடலை பரிசாக கொடுத்து
உறவாக வாங்கி தாங்கிக் கொண்டு
இருப்பவள் தாரம்.

கண் கலங்கும் போது கண் துடைத்து
நம்மைக் கண்டவுடன் பாச வெள்ளத்தை
திறந்து விடுபவள் தாய்.

இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு எடுத்து  நாம் துவண்டு
விடும் வேளையிலே தோழனுக்கு
தோழியாய் தோள் கொடுத்து தலை
கோதி விடுபவள் தாரம்.

நாம் தள்ளி தள்ளி போனாலும்
அள்ளி அள்ளி கொடுக்காத
போதிலும் விட்டுக் கொடுக்காது
பிறரிடம் தன் பிள்ளை பெயர்
சொல்லி சொல்லி புகழ் பாடுபவள் தாய்.

ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக
என் ஆண்மைக்கு இழுக்கு எழாமல்
நெஞ்சில் என்னை சுமந்து  என்
வம்சம்  வளர தந்தை என்னும்
பெயர் பெற்றுக் கொடுப்பவள் தாரம்.

நம் இறுதி மூச்சு வரை உறுதியான
உறவு தாய் விலை கொடுத்தும்
பதவியைக் காட்டியும் மீண்டும்
ஒரு முறை பெற முடியா பந்தம்  தாய்.

தாரம் மறு தாரத்துக்கு வழியுண்டு
ஆனாலும் முன் தாரத்தின் பாசத்தை
மறந்திட வழியில்லை.

வலக் கண் இடக் கண் தாயும் தாரமும்
இதில் எக் கண் வேண்டும் என்று
கேட்டால் பதில் கிடைத்து விடுமோ
நல்ல ஆண் மகனிடம்.

இரு கண்ணுக்கும் அவன் ஒருவன்
என பதில் வந்து விடும் மறு கணம்
தாரமும் மறு தாயே இதை மறுத்துப்
பதில் கூறுவார் உண்டோ.


Wednesday 27 January 2016

பாப்பா சுட்ட புட்டு

பாப்பா தட்டி சுட்ட புட்டு 
தேங்காய்  சுரண்டி எடுத்த
சுரட்டை கொண்டு  சுட்ட புட்டு 
ஈர மண்ணை தொட்டு எடுத்து
சுட்டாள் இரண்டு புட்டு ...///

துட்டுக்கு கூவி விற்கிறாள் 
அதை வாங்கும் படி அன்னையிடம்
அடம் பிடித்து நின்கிறாள்  ....//

துட்டைக் கொடுத்து பெற்றுக்
கொண்டாள் அன்னை 
அதை உண்டு சுவையைக்
கூறும் படி குதித்து
அழுகிறாள் பாப்பா  .......///

தன் மழலையின் அழுகையை
முடிவுக்குக் கொண்டு வரவே
ஈர மண்ணை எடுத்து வாயிலே
போட்டாள் அன்னை

ஈர மண்ணை விட தாய் உள்ளம்
ஈரமானது என்று அறியாத மழலை 
சிரித்து மகிழ்கின்றாள்

அன்னையை
அணைத்து தோளிலே
தொங்கி மகிழ்கின்றாள்
அன்பு முந்தம் பதித்து
மகிழ்கின்றாள்  பாப்பா
தன் பிட்டை தாய்
உண்டது கண்டு 

பத்து மாதம் சுமந்த தாய் மனம்
பூரிப்புக் கொள்கின்றது நின்று.....//

        

Tuesday 26 January 2016

காதலில் விழுந்த பெண் மனம்

பூவே பூவே
இந்தப் பூவையின்
கதை கேளாயோ.......\

பெண் இவள்
உரைக்கையிலே
பொறுமை
இழக்காமல்
கேளாயோ........\

பூவை என்
உள்ளத்தில்
புகுந்தது ஒரு
முகம் அது நான்
கண்ட திரு முகம்........\

நீ மலர்ந்தது
போல் அன்று
மலர்ந்தது என்
முகம்.......................\

ஆட்டி விடும்
காற்றுக்கு ...நீ
தலை அசைக்காய்
அவன் விட்ட தூதுக்கு
நான் தலை
அசைத்தேன்......................\

தாகம் கொண்ட
காதல் இல்லை  மலரே
மோகம் கொண்ட காதலும்
இல்லை மலரே
ஒருதலைக்
காதலும் இல்லவே
இல்லை மலரே.............\

ஈருடலும் ஓர்
உயிராக  மாறவே
இதயம் துடிக்கும்
காதல்  இது.............\

கலங்கரை
விளக்கமாக
வேண்டும் என்று
இக்குளக்கரையில்
நான் நின்று
புலம்புகின்றேன்
உன்னிடம்
இன்று  பூவே................\

பூவே நீயும்
பெண் இனமே
என் இன்ப நிலை
கண்டு வெட்கம்
கொண்டாயோ
கொஞ்சம்...............\

பல பட்டாம் பூச்சி
பறக்கின்றது
என்னைச்  சுத்தி
கண்னை மூடிப்
பார்க்கையிலே........\

பரந்த நீரிலே
தெளிந்த முகமாய்
தோணுது அவர்
முகம் கண்னைத்
திறக்கையிலே..........\

திருமண நாளிலே
என் மருதாணிக்
கரங்களிலே சிவந்த
முகத்துடன் உன்னை
ஏந்தும் நாளை நீயும்
காண ஆசை கொள்வாயோ
மலரே மலரே..............\

பூவே என் மனக்கோட்டை
வளர்கின்றதே என் மனமோ
காதல் காவியம் வடிக்கின்றதே
காதலில் விழுந்தேன் கால்கள்
நிலம் விட்டுப் பறக்கின்றதே
பெண்மை இவள் உள்ளத்திலும்
உன்னைப் போன்று பல
வண்ணப்பூக்களும் தோணுதே
பூவே  பூவே என்  வாசப் பூவே
என் சுவாசம் அவர்தான் பூவே.......\

 

பசுமை

இயன்ற வரை
இயற்கையைக்
காப்போம்
செயற்கையைக்
குறைப்போம் ...!

இயற்கையின்
நடுவே நின்று
இழுத்து விட்டுப்
பார்  மூச்சி
கொடுக்கும்
புத்துணர்ச்சி ..!

விருந்தோ
மருந்தானது
அன்று ஒரு காலம்
மருந்தோ விருந்தாகப்
போனது இக் காலம் ...!

இயற்கை  எழில்
காட்சியை
தொலைக்காட்சியில்
பார்க்கும் போது
மனதிலே எழும்
ஒரு தாக்கம் மறு
நிமிடம்  மறந்து விடும்
அதை மனித. மனம்..

காட்டை வெட்டி
வீட்டை நட்டுவிடுவான்
பச்சைப்புல்லை மறைத்து
நடை பாதையை அமைத்து
விடுவான் கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை
கட்டிட மாயமே ..

நில நடுக்கம்
வந்துவிட்டால்
காணாமல் போகின்றது
மாயமாய்.

வீட்டுக்கு வீடு மரம்
வைப்போம்
நாளைய சமுதாயத்தின்
நெஞ்சினிலும் இதை
விதைப்போம்
இயற்கை  சீற்றத்துக்கு
தடை விதிப்போம்
இயன்ற வரை உலகை
காப்போம்.

நட்ட மரத்தின் வேர்
நிலதைக் காக்கும்
வளர்ந்த மரத்தின்
கிளை சூரிய
வெப்பத்தை தடுக்கும்
மரத்தின் இலையின்
பயனால் விவசாயிகளின்
கண்ணீர் துடைக்க மழை
கிடைக்கும்.

தூமைக் காற்று உலகை
சுத்தும்  ஆரோக்கிய
வாழ்வில் மக்கள்
இன்பம் தளிக்கும்.

இயற்கை உணவோடு
உடலுக்கு மருந்தும்
சேர்ந்தே கிடைக்கும்
இயற்கை  உரத்திலே
தானியம் விளைந்தால்.

இயற்கையை பேணுவோம்
செயற்கையை மாற்றுவோம்.

      

பெற்ரோர் பாசம்

பெற்ரோர் பாசம்
அது பாசாங்கு  இல்லாப் பாசம்
வேசம் இல்லாப் பாசம்
மாசி படியாப் பாசம்
நிறைவான பாசம்
முழுமையான பாசம்
அது எப்போதும்
பெற்ரோரிடம் வீசும் ....///

காசி கொடுத்து பெற முடியா நேசம்
அது அன்னையின் பாசம்
கருவறைப்  பாசம்
உரு எடுத்த பின்னும் வீசும்
கை பிடித்து நடக்கையிலே
கன்னம்  கிள்ளி அன்பு
முத்தம் பதித்து நித்தம் வீசும்
பாசத்தின் எல்லை அது
அன்னையிடம் இல்லை .....////

தோள் கொடுத்து தூக்கும்
தந்தை கொஞ்சம்  குட்டி
தட்டி வளர்ப்பார் அதனால்
பாசம் இல்லா நெஞ்சம் அல்ல
என்று சொல்ல முடியாது நின்று
கெஞ்சிப்பார் அவர் நெஞ்சின்
உள்ளே உள்ள பாசத்தின் ஆழத்தை
அறிவாய் கரடு முரடான பேச்சு
அதட்டல் ஆனால் கண்ணுக்குள்
நிலவாக.  நீதான் அவர் மூச்சு ....///

தன் பிள்ளையை திருத்தும்
நோக்கில் நாளு தட்டு தட்டி விட்டு
பிள்ளை தூங்கிய பின்னே தடவி
வருந்தும் தந்தை எங்கே
தன் பிள்ளை எத்தனை  தவறு
செய்தாலும் விட்டுக் கொடுக்காது
போராடும் தாயின் பாசம் எங்கே
வளர்ந்து நிமிந்த பின்னே
பெற்ரோரை மதியாது தூக்கி
எறியும் பிள்ளையின் பாசம்  எங்கே ....////

உண்மையான பாசம்
உயர்வான பாசம்
உள்ளத்தில் உள்ளது
என்றால்  அவை பெற்ரோரிடம்
மட்டுமே மற்ரோரிடம் காணக்கிடையா
நேசம் பாசம் இவை .....////

ஆனால் அந்த பாசத்துக்கும்
எல்லை வேலி போடும்
பிள்ளை உண்டு முதியோர்
இல்லம்  கொண்டு
இருந்தும் பெற்ரோர் பாசம்
அங்கும் தொடர்ந்து வீசும் ....///

       

தெருவோரக் கூத்தாடி கில்லாடி


கும்மாளம் 
கும்மாளம்
போடுதையா
என் காலும்   நீ
போட்டுக்கையா
தாளம்........\

கம்முன்னு
கும்முன்னு
ஓரமாக நின்னு
பார்த்துக்கையா
நீயும்.........\

கண்ணக்
கண்ண
உருட்டுவேன்
கையக்  கைய
நீட்டுவேன் நீ
துட்டுக் கொடுக்க
வேண்டுமையா
ஏ....ராசா.......\

வளைந்தாடுவேன்
சுருண்டாடுவேன்
நெளிந்தாடுவேன்
நிமிர்ந்தாடுவேன்
போதையில்
தள்ளாடுவேன்
கண்டுக்காதே
ஏ...கண்ணாயிதம்.......\

சலங்கை கட்டிஆடுவேன்
கொலுசு குளுங்க ஆடுவேன்
நீ தொட்டு இறுக்க இழுக்கும்
போது நொறுங்கும்
வளையல்களை
மிதித்தாடுவேன்........\

உன்  சீமையிலே ஒரு
பங்கு கேட்டுப் பாடுவேன்
என் சின்னப்  பண்ண
சின்ன மகனே...............\

கட்டிய மல்லிகை
கொட்டும் வரை 
குதித்தாடுவேன்
கூடவே உன்னை
அணைத்தாடுவேன் ( தஸ்)
(புஸ்) என்று இங்கிலிஸ்சியில்
கிழிக்கும்
இங்கிலாந்து மைனரே.......\

நான் நடு ரோட்டு மேல
கூத்துக் கட்டுவேன்
எங்க நாட்டுமேல
நோட்டமிட்டா ஓட்டம்
காட்டுவேன்..................\

நான்  சும்மா அக்கா இல்ல
சொர்னக்கா  சுண்டக்கா
இல்ல  பாவக்கா
நீ  முறுக்கெத்துப்
பார்க்காதே  பக்குபமாக உன்
கதையை முடிப்பா  இந்தக்கா.......\

போடா  போடா மண்டு
எத்தனையோ வசப்பாட்டு
நான் கொடுத்தேன் பாட்டினிலே
இது புரியாத நீயும் ஒரு மாங்காயெடா........\

    

மரணவாசலில் வந்த புத்தி


இளம்வயதிலே
இரு விரல் நடுவிலே
புது  வரவாக
நுழையும் சிகரெட்டாலும்.

பருவ வயதிலே ஒரு
பெக்  அடிப்போம்
என்று கூட்டம் போட்டு
அமர்ந்து மூச்சு முட்ட
குடிப்பதனாலும் .

குடி   கொள்கின்றனர்
அவனுக்குள்ளே
எத்தனையோ
கெட்டவைகள்.

தன்னைத்  தானே
மறக்கான்
நிதானம் இழக்கான்
நினைப்பது ஒன்று
செய்வது ஒன்றாக
நடக்கான் ஊருக்குள்
அவனோ  வேண்டா
வெறுப்பு.

கண்டு கொள்ளாமல்
அவன் கடந்து வருகின்றான்
பல ஆண்டு போதையிலே.

பாதைகள்  இடம்  மாறுது
பயணத்தின் போது
வாழ்கையும் தடம்
புரளுது  இதில் பிழைப்பவன்
பாதி  மாண்டு விடுபவன் மீதி.

வாழ வேண்டிய வயது
வழிப்பாதையில்
போகின்றது பலியாகி.

(நச்)என்றும் (இச் )என்றும்
காதல் வசனம் பேசி
கைத்தொலை பேசியை
முகர்ந்த படியே வாகனத்தை
செலுத்தையிலே வலு
இழந்த கரங்கள் கொண்டு
விடுகின்றது மரண வாசலிலே..

பாடு பட்ட பணமும்
பகட்டு வாழ்கையும்
கண் இமைக்கும் நேரத்திலே
பஞ்சாய் போனது பாதையிலே.

பாதையின்  விதி முறையை
அவன் மறந்தான்
இமன்  தன்  கடமையை
மறக்காமல் செய்து
முடித்தான்  .

விதி என்னும்
பெயரை மறைத்து விபத்து
என்னும் பேர் சூட்டியே அவன்
வென்றான் இவன் இறந்தான்.

கண்ணீர் விட்டு கதறி
அழுகின்றது உறவு
இவன் கண் திறக்க வில்லை
அதைக்  காணவே.

வாழ்க  வாழ்க  என்று
வாழ்த்திய பெற்ரோரை
செலுத்த வைத்தான்
கண்ணீர்  அஞ்சலி.

வலி   தாங்கி  மடி
ஏந்திய  தாய்தான் 
உணர்வாள்
உயிரின்  வெகுமதி .

ஆனால்
வளர்ந்த பிள்ளையோ
பெற்ரோர் அறிவுரை
உரைக்கும் வேளையில்
கூறுவது போனால்
போகட்டும்  காசி கொடுத்தா
வாங்கிய உயிரா  என்று.

அப்போது ஒரு வெத்துப்
காகிதத்தில் அச்சு இட்ட
பணந்தான்
பெரியவையாகப் போனது

இரத்தமும் தசையுமாக
சுமந்து தன் உயிரை பெரிதாக
நினையாது மரணத்தையும்
எதிர் நோக்கி ஒரு தாய்
ஈன்று  கொடுத்த உயிருக்கு
இல்லையா  மதிப்பு.

மதிகெட்டவன்
விதி  வரும் முனனே
தன்  இறப்பை  வா  வா
என்று அழைக்கான்

நிதானத்தைப்   பரிசாகக்
கொடுத்து இமை மூடும்
தறுவாயிலே  ஈன்றவளின்
அறிவுரை உறைக்கின்றது  புத்திக்கு
மரணம் மறைக்கின்றது
அதை  அறியவே நேரம்
கொடுக்காமல்.......\