Tuesday 5 January 2016

புரியாத விளையாட்டு புதுமையானது

ஈர மண் எடுத்து
வெட்டிய சுரட்டை
பொறக்கி தட்டி
தட்டி  மண்  புட்டு
தரையில் செய்தது
ஒரு காலம் அது
ஓடி மறைந்து
விட்டது இக் காலம்....\

ஓலை கிடுகு கொண்டு
கூடாரம் கட்டி கூட்டமாய்
கும்மாளம் போட்டு
விளையாடியது
ஒரு காலம் அது
மறைந்து போய்
விட்டது இக்காலம்...\

குட்டிக் கடை போட்டு
அம்மா வெட்டிக்
கொட்டிய காய் கறிகளை
எடுத்து வந்து கூவி கூவி
விற்று விவாதம் செய்து
போலி சண்டையிட்டது
ஒரு காலம் அதை
நினைத்துக் கதைக்கவே
நேரம் இல்லாமல் போனது
இக்காலம்.........\

நாமே நமக்கு
பெயர் சூட்டி
நேரத்துக்கு ஒரு
முறை நாளுக்கு
ஒரு பெயர் என்று
அழைத்து  விளையாடியது
அந்தக் காலம்  கூடார
விளையாட்டைப் பார்க்க
முடிகின்றதா  இக் காலம்....\

நிமிடத்துக்கு ஒரு தடவ
இரவும்  பகலும்
வரும்  உறங்குவது
போல்  உறங்கி விழிப்பது
போல் எழுந்து 
விளையாட்டுக்குள்ளேயே
ஒரு விளையாட்டாய்
நடிப்பு போட்ட நாட்கள்
கடந்து விட்டது
வெகு தூரம் திரும்ப
வருமோ  அது  இக்காலம்.....\

மூத்தவள் புட்டு தட்ட
இளையவள் அதை
தொட்டு உடைக்க
அவள் கண்ணை
மூக்கைப் பார்த்து
ஒரு குட்டு வைக்க
இளையவள்   கதறி அழ அம்மா
தடியோடு வர கூடி
விளையாடிய பசங்க
ஓட்டம் எடுக்க நான்
நின்று நடுங்கிய அந்தக்
கால நினைவுதான்
இக்காலத்தில்  மிஞ்சியவை....\

இப்போது மடி கணினியை
வைத்து விரித்த விழி
மூடாமல் பிள்ளை
பார்க்கின்றது நாமும்
எட்டிப் பார்த்தால்
அதன் உள்ளே  இரு
பொம்மைகள் தான்
இருக்கும்  ஒன்று நெருப்பை
கக்கும் ஒன்று நீரை ஊத்தும்
ஒன்று துள்ளி குதிக்கும்
அதனுடன் சேர்ந்து நம்
பிள்ளையும் குதிக்கும்...\

நமக்கு புரியவில்லையே
என்று கேட்டால்
சொன்னாலும் உங்களுக்கு
புரியாது என்று பதில்
உரைத்து விட்டு புரியாத
விளையாட்டை செல்லிலே
பார்க்குதுங்க  பிரியமாய்.....\

  

No comments:

Post a Comment