Friday 1 January 2016

வலைப் பூ

நீ யாரோ நான் யாரோ
அறியேன் ஆனால்
வளைத்துப் போட்டது
வலைப் பூக்கள் அறி
முகம் மட்டும் வைத்துக்
கொண்டு வலைக்குள்
மாட்டியது நமது அன்பு .

நூல் கொண்டு பின்னாத
வலைப் பூக்கள் தடைகள்
பல வந்தாலும் கணினியை
தட்டித் தட்டிப் பேச வைக்கும்
வலைப் பூக்கள் வாசணை
இல்லாது போனாலும்
பாசமாக உலகையே தன்
வசம் எடுத்த பூக்கள்   .

ஆண்கள்  பெண்கள்
வேற்றுமை இன்றி தன்
நினைவில் சூடிக்
கொள்ளும் பூக்கள்
சிரமமும் கொடுக்கும்
சிரிப்பும் கொடுக்கும் .

வீட்டில் திட்டும் வாங்கிக்
கொடுக்கும் புது தென்பும்
கொடுக்கும் கனியாத
கணினிக்குள் களையாத
வலையாக  வலைப்பூக்கள்  .

கவிஞர்களின் கவிதையும்
கலைஞர்களின் கதைகளும்
கில்லாடிகளின் கிலு கிலுப்பும்
பத்திப் பாட்டும் ஆங்கில நடன
மும் பல கிசு கிசு செய்தியும்  .

இவைகளை விரித்த வலையில்
சிக்க வைத்து காட்டிக் கொடுக்கும்
வலைப்பூக்கள் மாற்றங்கள் பல
வந்தாலும் மாறாமல் வளர
வேண்டும் வலைப் பூக்கள்
தொடர வேண்டும் நம் நேசம்  .
  
       

இக் கவிதையைப் பாராட்டிய
சங்கமம் முகநூலுக்கு எனது
நன்றிகள் மகிழ்ச்சி நன்றி சகோ
நீலமேகம் நீலா (குறிப்பு)

No comments:

Post a Comment