Friday 22 January 2016

மருமகள்


மருமகள்  அவள் மறு மகள்
கண்ணால் ஈன்று  எடுக்கும்
திருமகள்  உறவு என்று உரிமையாக
வரும் மகள்  உள்ளத்தில் பல
கனவுகளை  சுமந்து இல்லத்தில்
நுழைவாள் அவள் 

பிறந்த வீட்டு
உரிமையை இழந்து புகுந்த வீட்டுக்கு
வரும்  மணமகள் அவள்  பெற்ற
அன்னையின்  கரம் விட்டு தத்து
அன்னையென அத்தையை எண்ணி
வரும் பெண் அவள்

பாசத்தை
பெரிதாக நினைத்து பாதம் தூக்கி
படி ஏறி வரும் மங்கை அவள்
மாமி மருமகள்  உறவு அன்னை பிள்ளை
போல் வளரும் வரை  இல்லத்தில்
இன்பம் விளையாடும்  அமைதி
நிழலாடும்  இல் வாழ்வு
நல்வாழ்வாகும்.

மருமகளை மாற்றான் விட்டுப்
பிள்ளையாக மாமியாரும்
மாமியாரை  தனக்கு சுமையான
உறவாக மருமகளும்
நினைக்க ஆரம்பித்தால்
அங்கே  பருத்தி  போல் வெடித்து சிதறி
விடும் அத்தனை சந்தோஷமும் 

அதற்கு
காரணம்  ஈட்டிக்குப்
போட்டியாக உரையாடுவது
விட்டுக்கொடுக்கா மனமும்
வேற்றுமை காட்டும் குணமும் 
தனக்கு மட்டும் அனைத்தும்
உரிமை என்ற தவறான கோட்பாடும்

இவைகளை தட்டி விட்டால்  மகன்
வழி தொட்ட சொந்தம் சொர்கத்தைக்
கொடுக்கும் பக்கத்து வீட்டுக் கண்ணுக்கும்
பொறாமை பிறக்கும்  மாமி மருமகள்
உறவுக்கு உதாரணமாக உங்கள்
பெயர் சிறக்கும்  

அன்னைக்கு நிகர்
அத்தையும்  தந்தைக்கு சமம் மாமனாரும்
என்று வரும் மருமகள் நினைத்தால்
எங்கும் பிறக்காது மாமி மருமகள்  சண்டை.
தெருவில் பறக்காது குடும்ப கௌரவம்.

   

No comments:

Post a Comment