Saturday 2 January 2016

அத்தான் நினைவிலே புலம்பல்


குயிலாக உன் பெயரை
பாட ஆசை  அத்தானே
ஆனால் என் குரல்
கழுதைக்குச்  சொந்தமானது
அத்தானே...என் அன்பு
அத்தானே....!!!!

மயிலாக உன்
முன் நடனம்
ஆட ஆசைதான்
அத்தானே ஆனால்
என் கால்கள்
வளைவாக உள்ளது
அத்தானே.....என்
அன்பு அத்தானே...!!!!

அன்னம் போல்
உன் முன்னால்
நடந்து உன்னை
மயக்கி விட ஆசை
அத்தானே ஆனால்
என் உடலோ யானை
ஆட்டம் உள்ளதே
அத்தானே..என்
அன்பு அத்தானே...!!!

கிளிபோல் உன்னிடம்
செல்லமாய் மழலை
மொழி பேசிப் பழக
ஆசைதான் அத்தானே
ஆனால் எனக்கோ
திக்குவாயாச்சே
அத்தானே ...என்
அன்பு அத்தானே...!!

மான் போல் உன்
முன் துள்ளி துள்ளி
ஓடி விளையாட
ஆசைதான் அத்தானே
ஆனால் வானம் போல்
வெட்கம் உள்ளதே
அத்தானே...என்
அன்பு அத்தானே...!!!

மல்லிகை மலர்
எடுத்து உன் தோள்
அளவு பிடித்து மாலை
கட்டுவேன் அத்தானே
மாமன் குரல் கேட்டதும்
அதுதான் உங்க அப்பன்
குரல் கேட்டதும் தூக்கிப்
போடுவேன் அப்பாத்தா
படத்துக்கு அத்தானே
என் அன்பு அத்தானே...!!!

இத்தனை ஆசை
உன் மேல் அத்தானே
நீ வந்தால் நான்
நின்று விடுவேன் கதவு ஓரம்
அத்தானே..என்
அன்பு அத்தானே..!!

இரவு வந்ததும்
கதை  கதையாக
கூறுவேன் என்
தலையணையிடம்
அத்தானே என்
ஆசை அத்தானே
என் அன்பு அத்தானே
ஏனோஆசை வைத்தேன்
உன் மேலே அத்தானே...!!!

   

No comments:

Post a Comment