Thursday 21 January 2016

உள் நாட்டில் துடிப்பு வெளி நாட்டில் தவிப்பு


அன்று நடந்தவையை
நினைத்தால் ஓர்
இன்பம் ஓரமாய்
வலி வெளி நாட்டு
வாழ்வு எனக்குக்
காட்டிய வழி...............\

கற்றுக் கொடுத்தது
பலமொழியுடன்
எனக்குப் பாடம்
நம் நாட்டில்
ஊரைச்சுற்றி
விட்டு வந்தால்
சுவையான உணவு
நம் கையில்...............\

அது அப்போ
இப்போ உடலை
வருத்தி  உழைத்து
ஓய்ந்து வந்தால்
ஒரு  கப் நீர்
கொடுக்கவே கரம்
இல்லை.............\

நினைத்தாலே
விழியில்
நிறைகின்றது
வெள்ளம்.............\

அன்று ஒரு காலம்
மாமா என்று கூறி
அருகில்  ஓடி வரும்
தங்கை மகனைக்
கண்டு ஏய் என்னைத்
தொடாதே  துணி
கசங்கி விடும் அழுக்கு
ஒட்டி விடும் என்று தடை
போட்டு அந்த
மழலையின் மனதை
புண் பட வைத்த
நாளை எண்ணி
வருந்துகின்றேன்
தனிமையில்
நின்று இன்று..........\

துணியை துவைத்
உடுத்த முடியாத
போது நான் நினைத்து
வருந்துகின்றேன்
அந்த நிகழ்வை ..............\

இன்று  உழைப்பு
என்னும் பெயரில்
ஒரு விதமான
தவிப்பு..............\

கட்டிய மனைவியைக்
கை நீட்டி அடித்த
பின்னும் நாம்
தலையணை
இன்றி மெத்தையில்
உறங்குவதைக்
கண்டு ஓடி வந்து
தூக்கி வைப்பாள்
தலைக்கு அணை.......\

ஆயிரம் அறிவுரை
கூறுவதால்
அன்னைக்கும்
என்னிடம்
மதிப்பு இல்லை
இருந்தும் அருகில்
வந்து என் முடி
கோதி விட்டு
போத்திவிட்டுச்
செல்வார்...........\

அப்போது
அவர்கள்
காட்டும்
அக்கறையைக்
கண்டு
கொள்ளவில்லை
என் நெஞ்சம்
பாசத்தை
பாசாங்காகப்
படம் எடுத்தது
என்  அறியாமை........\

இன்று தரையிலே
உறங்குகின்றேன்
ஓடி வந்து தடாவ
ஒரு உறவு இல்லை
அருகில் ........\

உள்ளம்
வலிக்கின்றது
முள் பட்டதுபோல்
அன் நாள்
நிகழ்வுகளை
கண் முன்னே
கொண்டு
வருகின்றது..........\

இன்று பணம்
வந்து விட்டது
கூடவே பாசமும்
வருகின்றது
பணத்தை
அனுப்ப
முடிகின்றது
பாசத்தைக்
காட்ட வழி
இல்லாமல்
போகின்றதே........\

பெற்ற பிள்ளை
சத்தமிட்டால்
சடாரென
அடித்து
விடுவோம்
நித்திரை
கெட்டது என்று.........\

இப்போது
குடிகாரன்
கூக்குரல்
ஓசையின்  ஒலியிலே
நித்திரை
குளியல்
அறையிலே..........\

அளவு இல்லா
வேதனை
அறிவிக்க மனம்
இல்லை
அன்னைக்கு........\

மனைவிக்கு
மடலில் வரைய
நிறைய இருக்கு
ஆனாலும் வரிகள்
வரவில்லை என்
வலி என்னோடு
என்று சொல்லாமல்
நிறைவு பெறுகின்றது
மடல் என்றுமே...................\

நான் வளர்த்த
நாயைத்  திண்னையில்
உறங்க விடாமல்
தெருவுக்கு துரத்துவேன்
இன்று நான் தெரு நாய்
போல் உறங்கும்
நிலமையடா.................\

இதுதான்  என்
தவறுகளுக்கு
கிடைத்த
தண்டனையோ
இளமை தவறுகளை
நினைத்து
திருந்தி வரும்
வேளையிலே
என்னைத் தேடி
முதுமையும் ஓடி
வந்துவிடுகின்றதே.........\

எது தேவையோ
அதை வாங்க
இழப்பது பணத்தை
பணத்தை எடுக்க
இழக்கவேண்டும்
இளமையை............\

அழகிய
வாழ்வோ
ஆபத்தான
வாழ்வோ
அவஷ்த்தையான
வாழ்வோ
ஆறுதலான
வாழ்வோ
அவர் அவர்
விதியின் வழி
அமையும்
இதுதான்
வெளி  நாட்டு
வாழ்கை
ஆனால் யாருக்கும்
அமைவதில்லை
ஆரோக்கியமான
வாழ்வு என்பது
இவைதான்  என்றுமே  நிஜம்
மற்றவை எல்லாம்
வெறும் நிழல்  தானடா....\

  

1 comment:

  1. அவர் அவர்
    விதியின் வழி
    அமையும்
    இதுதான்
    வெளி நாட்டு
    வாழ்கை
    ஆனால் யாருக்கும்
    அமைவதில்லை
    ஆரோக்கியமான
    வாழ்வு என்பது
    இவைதான் என்றுமே நிஜம்
    மற்றவை எல்லாம்
    வெறும் நிழல் தானடா....\

    ReplyDelete