Tuesday 26 January 2016

மன்னவன் வந்தானடி எனை நாடி


நெருங்கி  நெருங்கி
நீ  வந்தாய்  நிரந்தரமாக
என்  நெஞ்சில் இடம்
கொண்டாயே  மன்னவா
ஓ  மன்னவா.................\

உரசி  உரசி பேசி
மடியில்  உறங்க
இடம் எடுத்தாயே
மன்னவா  ஓ  மன்னவா.....\

வண்ண மலர் சோலையிலே
உன் எண்ணம்  அதை
முளுமையாகச் சொல்லவா
மன்னவா  ஓ  மன்னவா..........\

நடு  இரவினிலே
நிலத்து நீரினிலே
தன் முகம் பார்க்கும்
நிலவும்  நிழல் பார்த்து
ரசிப்பது போல்  மன்னவா
நானும் நடு சாமத்திலே
உன் முகம் தேடி ரசிப்பேன்
என்  இதயத்திலே
மன்னவா  ஓ  மன்னவா......\

மடியில்  இடம்  கொடுக்கவே
என் நாணம்  தடை போட்டது
மன்னவா   
நீ  தலை  சாய்த்ததுமே
தடையை உடைத்து இடம்
கொடுத்தேன் மன்னவா
ஓ மன்னவா...............\

உன்  கட்டழகின்  உடலிலே
என்  விரல் கட்டெறும்பாக
ஊரவேண்டும்  என்று  நீ
கட்டளையிட்டதுமே  இந்தப்
பெட்டை மயிலின் மனம்
பட்ட பாடு அறிவாயோ
மன்னவா  ஓ  மன்னவா.......\

எத்தனையோ  கடமையாளிகளின்
கண்களிலே எதை தூவி விட்டு
டொக்கு  டொக்கு  குதிரையில்
கட  கட என்று ஓடி  வந்தாயோ
என்னைக்  காணவே
மன்னவா  ஓ  மன்னவா................\

ஆல மரம் குடை பிடிக்க
புல்  தரை  பாய்  விரிக்க
பள்ளி கொள்ள வந்தாயோ
மன்னவா  ஓ  மன்னவா.........\

நீ  விரல்  தொட்டதுமே
முதல்  பாடம் கற்றுக்
கொண்டேன்  மன்னவா
ஓ  மன்னவா.............\

பள்ளி  அறை  தேவை பல
பாடம்  படிக்கவே மன்னவா
வாத்தியாக  நீ  வர வேண்டும்
உன்  பள்ளி அறைக்கு
என்னை அழைக்க வருவாயோ
மன்னவா  ஓ  மன்னவா............\

நீ  மடி  சாய்ந்தது போதும்
மன்னவா மாலை நெருங்கி
வந்து விட்டது   சென்று  வா
நீ  சென்று  வா  மன்னவா
ஓ  மன்னவா  என்  மன்னவா......\

  

No comments:

Post a Comment