Sunday 3 January 2016

இயற்கையை ரசிப்போம்

வான் மழை பூமியை நணைக்க
நீர் பட்ட நிலம் ஈரப்பசை கிடைக்க
தண்ணீர் தேங்கிய மண்ணில்
புதையுண்ட விதை முளையிட்டு
துளியிட்டு தளியிட்டு கொழுந்து
வளர்ந்து இலையாகி செடியாகி
கொடியாகும்...!!!

வளர்ந்த செடியோ
கட்டு வளர்ந்து
பல வேர் விட்டு
கிளைகள் நிறைந்து
அதிக குச்சியை சுமர்ந்து
விருட்சமாகும்...!!!

சாலை ஓரமாக நட்ட செடி
தெருவோரம் நிழல்  கொடுக்க
பாதையெல்லாம் பூக்கள் கிடக்க
வழிப் போக்கனும் அதைப் பார்த்து
ரசிக்க....!!!

அடடா பசுமையான நாடு உன் நாடு
ஐயோடா குளுமையான ஊர் உன்னுடையது
ஆமான்டா குளு குளுப்பாக உள்ளது உன்ட தேசம்
ஜாலி டா குளிர்ச்சியாய் இருக்கு  நீ இருக்கும்
இடம்...!!!!

தயக்கத்தோடு வந்தவளும்
மயங்கி நிற்க மயக்கத்தோடு
கூட்டி வந்தவனும் தயங்கி
தவிக்கும் சோலை வனமாக
மாறவேண்டும் பசுமை படர்
நிலமாக ஆகவேண்டும்...!!

கதிரவன் வருகையில் பச்சை மரமாக
அதை தாங்க வேண்டும்
பகலவன் அதனுடன் உறவாட வேண்டும்
சூரியனின் கதிர்கள் கரத்தின்  கிளைகளான
இடையால் பூமியைத் தொட வேண்டும்
மாலையானதும் ஞாயிறு மெல்ல மறைந்து
செல்கையில் இத்தனை அழகு கொண்ட
பசுமை படர் உலகம்  அல்லவா என்னும்
எதிர் காலம் வளரவேண்டும்...!!!

       

No comments:

Post a Comment