Monday 25 January 2016

முடிவு இல்லாப் பயணம்

பிறப்பு முதல்  இறப்பு வரை
இழுத்து விடும் மூச்சு நிறுத்தும்
வரை மனிதனுக்கு முடிவு இல்லாப்
பயணம்  தேடலின் வழியே

அன்றாட வாழ்க்கைக்கு என்று
தேட ஆரம்பித்து அதையே விரிவு
படுத்த முயற்சித்து ஓடி ஓடி தேடலின்
பாதையிலே நிற்கான் அல்லும்
பகலும் 

உண்ண உறங்க உடுக்க
என்ற வார்த்தைக்கு விடை கொடுத்து
மனைவி மக்களுக்கு என்னும் பெயரில்
இறங்கி பயணிக்கான்

இந்தப் பணத்துக்கான
பயணம்தான்
அலைச்சலான பயணம்
அவஸ்தையான
பயணம் ஆபாத்தான
பயணம் 

இந்த பாதையில் பயணிப்போரை
அவமானம் தேடி வரும் அடிமைத் தனம்
தலை தூக்கி வரவேற்கும்  இருந்தும்
பயணிப்பான் மனிதன்

ஒரு சாண் வயிற்றுக்காக
இந்த பயணத்தின் முடிவு
அறியாமலே
அவன் பேச்சு மூச்சு
நிறுத்தும் வரை

இறுதியில் அந்த மூச்சும் பயணிக்கிறது
இறப்பு என்று ஒன்றை
உலகிக்கு காட்டி

பயணிக்கும் மூச்சும்
எங்கு பயணிக்கின்றது
என்று முடிவு அறியாமலே

முடிவைத் தேடி
பின்னாடி பயணிக்கின்றது
ஆண்டும்
தொடருகின்ற தொடர்
கதையாக

இறுதி வரை
முடிவறியாப்  பயணமாய்
முடிவாகிப் போகிறது
மனித வாழ்விலே.

  

No comments:

Post a Comment