Friday 8 January 2016

தந்தையின் தாலாட்டு


மலர்ந்த  மலர் ஒன்று
சுத்தும்  வண்டு  ரெண்டு
ராகம் பாடி  உறங்க  வைப்பேன்
மகளே  ஆராரோ..ஆரிரரோ.

அள்ளி  எடுத்த  அன்னை
விட்டுச்  சென்றார் உன்னை
பள்ளி  கொண்ட  தந்தை
வாரி   எடுத்த பிள்ளை நீதானே
அன்பு மகளே ஆராரோ...ஆரிரரோ.

மின்னும்   பொன்  கண்ணம்
என்று  மெதுவாய்  தொட்டு நான்
அன்பு முத்தம்  பதிப்பேன்  சின்னக்
கரம் பிடித்து  அழகை ரசிப்பேன்
அன்பு மகளே  ஆராரோ...ஆரிரரோ.

ஆசை  மலரை  தந்தவள் எங்கே
பாசமலர்   வந்தது இங்கே
நேசம்  கொண்ட தந்தை மனசில்
ஏக்கம் வந்தது  தங்கம் தாங்குமா
என் நெஞ்சம்   அன்பு மலரே
ஆராரோ  ...ஆரிரரோ.

அன்னை  என்ற தெய்வம் விட்டுச்
சென்ற செல்வமே நான்  கலங்காது
காப்பேன் நித்தமும் உம்மையடி
அன்பு மகளே  ஆரிரோ...ஆராரோ
மகளே நீ  ஆராரோ ...ஆரிரரோ.

No comments:

Post a Comment