Friday 1 January 2016

கைம்பெண்ணின் காதல்


ஒருஆண் மகனைப்
பார்த்தால் குற்றம்
பழகிவந்தால் குற்றம்
பேசினால் குற்றம்
சமுதாயப் பார்வையில்
விதவை...///

அதையும் மீறி  பழகும்
பெண்களுக்கு பல
பெயர்கள் சூட்டி விடும்
உலகம்...\\\

இன் நிலையில்
தன்னை அறியாமல்
அவள் நெஞ்சையும்
தொட்டு விடுவான்
ஒரு ஆண்...\\\

அதை அவனிடமும்
சொல்ல முடியாது
உறவினரிடமும்
எடுத்துரைக் முடியாது
விதவை என்னும்
பதவி தடுக்கும்....\\

நெஞ்சில் ஏக்கம்
நினைவில் தாக்கம்
நெருப்பில் விழுந்த
விட்டில் பூச்சைப்
போல் எரிந்து துடிக்கும்
அவள் ஆசைகள்..\\

ஏற்றுக் கொள்ளும்
இதயம் அனைத்து
ஆண்களுக்கும்
இல்லை எடுத்து
உரைக்கும் துணிவு
இவளுக்கும்
இல்லை......\\\\

காதல் காதல் அது
சாதனை இன்றி
சாபமாக மாறிவிடும்
விதவைக்கு....\\

  வெள்ளை மல்லிகை
மலரிலும் வாசணை
இருப்பது போல்தான்
வெள்ளைப் புடவக்குள்
ஒழிந்து இருக்கும்
உயிரிலும் ஆசை
இருக்கும்....\\\

ஆண் பெண் இருபரையும்
படைத்தது ஒரு கடவுள்தான்
ஆண் எத்தனை திருமணம்
  செய்தாலும் ஏற்றுக்
கொள்ளும் உலகம்..\\\

ஏனோ பிரபஞ்சத்தில்
பெண்களை மட்டும்
ஓர வஞ்சமாகப்
பார்ப்பது பல நெஞ்சம்

      

No comments:

Post a Comment