அசைக்க முடியாத நம்பிக்கையும் 
பிரிக்க முடியாத பாசமும் 
ஒரு பக்திதான் .....///
அள்ளிக் கொடுத்து கை சிவக்க.
பசித்தவனுக்கு பசிதீர்த்தால் 
அதில் கிடைக்கும் முக்தியும் 
திருப்தியும் ஒரு வகையில் 
பக்திதான் ......//
செய்யும் தொழிலை
செம்மையாக நேசித்தால் 
அதற்கும் மறு பெயர் பக்தி....///
பக்தி என்று தனிப்பட
இவையும் இல்லை 
சுற்றியுள்ள அணைத்தையும் 
ஒரு மனதோடு பார்த்து 
ஒருமைப்பாட்டாக. 
நேசிக்கும் ஒளியின்
தீயே பக்தி......////
விட்ட தவறை நினைத்து 
வருந்தி பெற்ரோரின் 
பாதம் பணிந்து பெறும் 
ஆசியும் பக்தி ......////
இல்லறத்தை நல் முறையில்
நடத்தி துணையை தன் 
உயிராய் போற்றி மாற்றான் 
மனைவி மீது காமப்பார்வை 
வீசாது நற்பண்போடு 
நடந்தால் அவையும் 
மனக்கட்டுப்பாட்டின் பக்தி .....///
தொண்டு தொட்டு வந்தது 
இறை பத்தி அதை என்றும் 
மறவாது தொடரவேண்டும் 
என்பது புத்தியின் பக்தி .....///
பால் உற்றுவது பண்டங்கள்
படைத்தல் அனைத்தும் 
மனிதனின் ஆத்மா திருத்தியே....///
உயிர் பலி கொடுத்தல்
தீப்பொறி மிதித்தல் எல்லாம் 
புத்தி மான்கள் அவர்கள்
யுத்தியால் பரப்பி விட்ட பக்தி....///
மனசாட்சிக்குப் பயந்து 
மனித நேயத்தோடு நடப்பவனுக்கு 
அவன் நம்பிக்கைதான் பக்தியே....////
நம்மை மிஞ்சி ஒரு சக்தி உண்டு 
அவை கண்ணுக்குப் 
புலப்படுவதும் இல்லை 
அவை பக்தி என்னும் 
கோட்பாட்டை போட்டு 
மதம் என்னும் பெயரில் 
மனிதனை பிரிக்கவும் இல்லை .....///
படிப்போருக்கு தேவை 
கல்வி மேல் பக்தி 
உழைக்கத் துடிப்போருக்குத் 
தேவை உழைப்பின் மேல் பக்தி
சாதிக்க. நினைப்போருக்கு 
தேவை நம்பிக்கை மேல் பக்தி
எதுவானாலும் தாங்க முடிவு 
எடுப்போருக்குத் தேவை 
தன் உடல் மேல் பக்தி...../////
இவைகளை மீறி பக்தி
எங்கே உண்டு..???
 
  
No comments:
Post a Comment