Tuesday 5 January 2016

வம்பு இழுக்கும் ஆணுக்காக

பெண்ணை மதியா
ஆண் மகனே கொஞ்சம்
நில்லடா.

நீ என்றுமே பெண்ணுக்கு
சுமைதானடா.

அதையும் கொஞ்சம்
நினைவில் வையடா.

கருவான நாள் முதல்
உருவம்கொண்ட நாள்
வரை பெண்ணுக்கு நீ
சுமைதானடா.

இதை நினைவில்
கொள்ளாமல் பெண்ணை
தூற்றுவதும் ஏனடா.

கருவில் அன்னைக்கு சுமை
கட்டிலில் மனைவிக்கு சுமை
காலம் பூரா பூமா தேவிக்குச் சுமை
காலம் கடந்தும் இதை உணராதது
உன் மடமையின் வெளிப்பாடடா.

பெண்ணுக்குள் உருவாகி
பெண்ணுக்குள் உணர்வாகி
பெண்ணிலே உனைக் காணும்
திருமகனே  பெண்களையே
இழிவாக பேசுகிறாயே அதில்
உன் உடன் பிறப்பு
தென்படவில்லையோடா.

அன்னை மார்வில் பால்
சுவைத்து அடுத்தவள் மார்வை
காமக் கண் கொண்டு நோக்குகிறாயே
அவை உயிர் ஊட்டியின் உறுப்பு
என்று எப்போது புரிந்து
கொள்வாயெடா.

கறந்த பாலாக உன்
மனதை வையடா.

வையகமே பெண்கள்
கையில் தானடா.

         

No comments:

Post a Comment