Sunday 3 January 2016

மச்சான் ஏங்க வச்சான்


அல்லிக் குளத்தில்
குளிக்கையிலே
கிள்ளி  நொள்ளி
விளையாடிப்புட்டு
போன மச்சானின்
கடுதாசி யைக்
காணலயே,,,,, காணலயே,,,, !!!

மாந்தோப்புக்குள்ளே
ஓடிப்புடிச்சு விளையாடி
மறைந்து மறைந்து
உறவாடிப்புட்டுப்
போன மச்சான்
கடுதாசி  அனுப்பலயே
அனுப்பலயே,,,,,, !!!!

வாழைத் தோப்புக்குள்ளே
வைத்து  வாழ்க்கை
கொடுப்பேன் என்று
வாக்கு கொடுத்த
மச்சான்  ஏனோ கடுதாசி
போட தாமதிக்கான்,,,,
தாமதிக்கான்,,,, !!!!

களை எடுக்கும்
வேளையிலே கலைப்பில்
நான் மயங்கி விழவே
தாங்கிப் பிடிச்ச மச்சான்
இன்று கடுதாசி 
இல்லாமல்  ஏங்க
வச்சான்,,, ஏங்கவச்சான்,,,, !!!!

அம்மன் திருவிழாக்கு
வந்த மச்சான் ஏய்
புள்ள. கருவாச்சி  வா
புள்ள இன்று நம்
ஆட்சிதான்  என
கைபுடிச்சுக் கூட்டிப்
போய் கண்ணாடி
வளையலை கை நிறையப்
போட்ட மச்சான்  
ஒரு கடுதாசி  என் கையில்
கொடுக்காமல்  தாமதிக்கான்,,
, தாமதிக்கான்,,,, !!!

ஞாயிறு  சந்தையில்
நாளு முளம் மல்லிகை
வாங்கி ஒட்டி  ஒட்டி
வந்து ஓரக் கண்ணை
சிமிட்டி  என் கைமேல
கொடுத்த மச்சான் 
கடுதாசி  ஒன்று போடாமல்
என் கண்ணைக் கலங்க.
வைக்கான்,,,, கலங்க
வைக்கான்,,,, !!!!

கொடுவா மீன் ஆக்கிப்
போடையிலே கிசு  கிசு
என்று குறும்பு தனமாக
பேசி சுவைத்த மச்சான்
இன்று நான் உண்ணாமல்
தவிப்பதை மறுந்துவிட்டான் கடுதாசி
போடாமல் ஏங்க விட்டான்
ஏனோ,,,ஏனோ,,,!!!

கன்னி நான் காத்திருக்கேன்
ஆசை மச்சானே 
நாளு வார்தை கிறுக்கி ஒரு
கடுதாசி போடு மச்சானே
நான் சொல்லிப்புட்டேன்
ஆமாம் அவ்வளவுதான்
கடுதாசியை நான்
காத்திருக்கேன் வழி
பார்த்திருக்கேன் ,,,
பார்த்திருக்கேன் ஆசை
மச்சானே,,,,,!!!!
   

No comments:

Post a Comment