Thursday 28 January 2016

தாயா தாரமா

உருவில் உயிர் கொடுத்து
உதிரத்தை பாலாக கொடுத்து
அடிவயிறு தடவி ஈன்று
எடுப்பவள் தாய்.

உள்ளத்தில் இடம் கொடுத்து
உணர்வில் உயிர் கொடுத்து
உடலை பரிசாக கொடுத்து
உறவாக வாங்கி தாங்கிக் கொண்டு
இருப்பவள் தாரம்.

கண் கலங்கும் போது கண் துடைத்து
நம்மைக் கண்டவுடன் பாச வெள்ளத்தை
திறந்து விடுபவள் தாய்.

இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு எடுத்து  நாம் துவண்டு
விடும் வேளையிலே தோழனுக்கு
தோழியாய் தோள் கொடுத்து தலை
கோதி விடுபவள் தாரம்.

நாம் தள்ளி தள்ளி போனாலும்
அள்ளி அள்ளி கொடுக்காத
போதிலும் விட்டுக் கொடுக்காது
பிறரிடம் தன் பிள்ளை பெயர்
சொல்லி சொல்லி புகழ் பாடுபவள் தாய்.

ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக
என் ஆண்மைக்கு இழுக்கு எழாமல்
நெஞ்சில் என்னை சுமந்து  என்
வம்சம்  வளர தந்தை என்னும்
பெயர் பெற்றுக் கொடுப்பவள் தாரம்.

நம் இறுதி மூச்சு வரை உறுதியான
உறவு தாய் விலை கொடுத்தும்
பதவியைக் காட்டியும் மீண்டும்
ஒரு முறை பெற முடியா பந்தம்  தாய்.

தாரம் மறு தாரத்துக்கு வழியுண்டு
ஆனாலும் முன் தாரத்தின் பாசத்தை
மறந்திட வழியில்லை.

வலக் கண் இடக் கண் தாயும் தாரமும்
இதில் எக் கண் வேண்டும் என்று
கேட்டால் பதில் கிடைத்து விடுமோ
நல்ல ஆண் மகனிடம்.

இரு கண்ணுக்கும் அவன் ஒருவன்
என பதில் வந்து விடும் மறு கணம்
தாரமும் மறு தாயே இதை மறுத்துப்
பதில் கூறுவார் உண்டோ.


No comments:

Post a Comment