Sunday 3 January 2016

உள்ளத்தை மூடாதே அன்பே

நான் கண் இழந்தவள்
என்று அறிந்தும்  ஓவியம்
தீட்டு என்று அடம் பிடிக்கிறாய்
ஏன் எனக் கேட்டாள்  அன்பின்
வெளிப்பாடு  என்று பதில்
உரைக்கிறாய் ....../////

என் கைத் தடி நீ தான் என்று
கரம் கொடு என்றால்  எட்டி
நின்று கரம் நீட்ட மறுக்கிறாய்
ஏன் எனக்கேட்டால் தன் நம்பிக்கை
பிறக்க என்று கதை அளக்கிறாய் .....////
,

என் காதுகள் மந்தமானவை என
தெரிந்தும் காதருகே இரகசியம்
உரைக்கிறாய்  ஏன் இந்த விளையாட்டு
உமக்கு எனக் கேட்டால்  செவிக்கு
பயிற்சி  கொடுக்கின்றேன் என்று
சொல்லிச் சிரிக்கின்றாய் ...../

வாய் பேசா ஊமையென
அறிந்தும்  மேடை ஏற்றி விட்டு
பேசும் படி கட்டளை  இடுகிறாய்
நான் தேம்பி அழத்தொடங்கியதும்
கை பிடித்து  இழுத்துச் செல்கிறாய்
ஏன் இந்த வெறுப்பு என நான்
செய்கை  காட்டவே அதலாம் ஒன்றும்
இல்லை எனக் மறுக்கிறாய் .....///

என்னுள்ளே எப்போதும்
எடை போட இயலாத
சோகத்தை நிறப்புகிறாய்
என்னை உன் மனதில்
நிறுத்தி சிந்திக்க மறக்கிறாய்.,...///

உயிர் திறக்கவோ மறக்கவோ
துணிவு இல்லா என் மனம்
மரணத்தை விரும்புது
படைத்தவன் கொடுத்த விதி
விளையாட்டை எண்ணி
புலம்புது .....////

கரும்பாக. நினைத்த வாழ்வு
வேம்பாக மாறியது  சிறப்பு
என நினைத்த இந்த உறவு
வெளியே தள்ளி சிறைக்கதவை
அடைத்து உள்ளே இருக்கிறது ...////

      

No comments:

Post a Comment