Tuesday 26 January 2016

வாழ்வென்னும் புதிர்

பாதை நோக்கி நடக்கையிலே
நேருக்கு நேராக முகம் பார்த்தது
விழி
மெது மெதுவாக மொழி வழி
உரையாடல்  ஆரம்பித்து  அவனுக்கும்
அவளுக்கும்
அறிமுகம்  அன்பாக மாறி
அன்பு ஆழமானது
அந்த ஆழ்கடலிலே
காதல் படகு உருவானது உறவாக
உரிமையோடு மகிழ்வாக மணநாள்
கனவோடு உலா வந்தது 
எதிர் வீட்டுப்
பெண்ணால் இரு வீட்டுக்கும் செய்தி
பறந்தது  இறக்கை இல்லாமலே
பறந்த செய்தி எரிச்சல்  மூட்டியது
மாப்பிள்ளை  வீட்டிலே
பதட்டத்தையும்
கண்ணீரையும் கூட்டியது  பெண்ணின்
இல்லத்திலே 
இரு வீட்டார் சந்திப்பு
நடுவராக நாட்டாமை விவாதம் ஆரம்பம்
விட்டுக்கொடுக்க வில்லை மாப்பிள்ளையின்
அன்னை
வெட்கம் விட்டுக் கெஞ்சினார்
பெண்ணை பெற்ற தந்தை விடாப்பிடியாக
அவள் அள்ளுகிறாள் சீர்வரிசைகளை
வார்த்தையிலே
மெது மெதுவாக மகனை
தோளைப்பிடித்து தள்ளுகிறாள்
நாட்டாமை
எழுந்து விட்டார் எல்லாம் முடிந்து விட்டது
அவன் அவளோடு இனிக்க இனிக்க பேசிய
வார்த்தைகளும்
இறுக்கி அணைத்த நாட்களும்
மட்டும் அவள் மனதில் அமர்ந்து விட்டது
நான்கு கண்ணும் நோக்கிய கடைசி
நாள் அன்று முடிந்து விட்டது 
அவள் விழி
நிறைய நீர் கிறங்கி விட்டது  மொழி மறந்து
இறகு உடைந்த கிளியாக அவள் 
சீர்
கொடுக்க வழி இல்லை கூடி வரும் வயதை
தடுக்க இயல வில்லை 
முதிர் கன்னியாய்
இல்லத்திலே அந்த மங்கையின் வாழ்க்கை
புரியாத புதிராக உள்ளத்திலே.
வாழ்வென்னும் புதிர் விடையறியா
விதி அவளோ முதிர் கன்னியாய் ஆனாள்

    

1 comment:

  1. சீர்
    கொடுக்க வழி இல்லை கூடி வரும் வயதை
    தடுக்க இயல வில்லை
    முதிர் கன்னியாய்
    இல்லத்திலே அந்த மங்கையின் வாழ்க்கை
    புரியாத புதிராக உள்ளத்திலே............

    ReplyDelete