என்னோட செல்லத்தை
தொலைத்து விட்டேன்.
தொலைத்த இடம் 
பள்ளமோ வெள்ளமோ
நான் அறியேன் .........////
வீசிய புயல் வேகமாக
இழுத்துச் சென்றதோ
கொட்டிய மழை நீர்
புரட்டிக் கொண்டு 
அலையோடு இணைத்து
விட்டதோ  காணாமல்
தேடுகின்றேன் கண்ணீரால்
வலை வீசுகின்றேன் ........//////
கண்டு பிடிப்போருக்கு
கொண்டு தருவேன் பரிசு.
அங்க அடையாளம்  அவசியம்
தங்கு தடை இன்றி சொல்ல 
முடியாத ரகசியம் ........////
வால் இல்லை கால் உண்டு
தலை மேலே முடியுண்டு 
காந்தக்கண்ணிரெண்டு
கடுப்பாகும் குணம் உண்டு ...///
அதற்காக அடுப்பங்கரை
பக்கம் தேடாதீர்கள் 
அடுப்புக்கும் செல்லத்துக்கும் 
எவ்விதமான தொடர்வும்
இல்லை ......./////
புடலங்காய்  உருவம் இல்லை
பூசணிக்காய் வயிறும்
இல்லை .....////
பாசமிக்க உள்ளம்
பயமுறுத்தும் தோற்றம் 
வேற்று மொழியில் 
இல்லை  நாட்டம்
தேன் தமிழை சுவைக்கும்
பிள்ளை .......//////
விரைவாக கண்டு பிடியுங்கள் 
மலிவான பரிசுப் பொருளை
பெற்று  செல்லுங்கள்
அன் நாள் செல்லம் போல்
என் நாளும் திருந்தி வரச்
சொல்லுங்கள் ......//////
 
No comments:
Post a Comment