Sunday 10 January 2016

கலாச்சாரம்

கலாச்சாரம்  அது
தமிழனுக்கு என்று ஓர்
அடையாளச் சின்னம்.
இப்போது சின்னா பின்னமாக
போகின்றது சாலை ஓர சாக்கடை
போல் .....///

தமிழால் தலை நிமிர்ந்து நில்
தமிழ் கலாச்சாரத்தால் தமிழை
தூக்கி நிறுத்தி நில்  ....///

என்னும் தாரக மந்திரத்தை
படிப்பு அறிவு இல்லாத காலத்திலே
படிப்பாக கொண்டு மனப் பிடிப்போடு
செய்தார்கள் நம் முன்னோர்கள் ...../////

படிப்பு பெருகியது படிப் படியாக
கலாச்சாரம்  உருகியது கலாச்சார
முறைகளை அறிந்தும் அலட்சியம்
கொள்வது சில பேர் அதை அறியாமல்
வெறுப்பது பல பேர் ......////

தாரம் என்று ஆகும் போது
பெண்ணுக்கு வேலி தாலி
ஆனால் தற்போது தாலிக்கு
வேலியாக தாலியோடு வருகை
தருகிறது உயர்தர பெட்டகம்
கழுத்துக்கு இல்லை சுமை
கலாச்சாரத்துக்கு இல்லை வேலை ...///

வேட்டிக்கு தடை சேலைக்கு தடை
வீட்டிலே கூட்டுப்பிராத்தனைக்குத்
தடை முதியோர் பாதம் பணிந்து
முதல் ஆசி பெறும் பணிக்குத் தடை
உச்சுப் பொட்டுக்கு தடை மெட்டி
ஓசைக்குத் தடை கணவன் மனைவி
இடையே கடமை உணவுக்குத் தடை
வீட்டின் முன் கோலத்துக்கு தடை
கலாச்சாரத்துக்கு மொத்தத்தில்
கொடுக்கார்கள் பிரியும் விடை ....////

கை கூப்பி வரவேற்பது தமிழர்
கலாச்சாரம்  கை குளுக்கி வரவேற்பது
நாகரிக பண்பாடு நல்லாவே கற்றுக்
கொண்டார்கள் விட்டு பிரிய மனம்
இல்லை நாகரிக மோகம் தொற்றிக்
கொண்டது கலாச்சாரம்   பின் தங்கி
விட்டது .....////

அங்கே  ஒன்று இங்கே  ஒன்று
இன்னும் கலாச்சார ஒளியில்
தென்படுகிறது  அதையும் இளய
சமுதாயம்  கேலியாலே கொல்லுகிறது
நாகரிகம்  பெருகியதால் நாதி அற்று
போகிறது தமிழர் கலாச்சாரம்
மாற்றம் காண வேண்டும் மன
ஏமாற்றம் மாறவேண்டும் நாளைய
சமுதயமும் நம் கலாச்சாரம் 
பேணவேண்டும்....../////

        

No comments:

Post a Comment