Friday 1 January 2016

கிராமிய பாடல்


ஆண்<><ஆற்றிலே  தூண்டல் போட்டு
              அதில இரண்டு மீன் பிடித்து
                ஆசையோடு==கொண்டு
                 வந்தேன் என் பொன்னம்மா
                 இதைச் சோக்காக ஆக்கிப்
                 போடு பொன்னம்மா..!!!!!

பெண்<>< வீட்டிலே பெண்பிள்ளைக்கு
                   ஒரு நகையும்  இல்லாமல்
                    பூட்டி வைக்கும் மச்சானே
                    உனக்கு அவித்து=அவித்துக்
                     கொட்ட  என்னால் ஏலாது
                      என் சின்ன மச்சானே..!!!

ஆண்<><என்னடி=சொன்னாய் எனக்கு
                   கெட்ட கோபம் வருகின்றது ..!!!

பெண்<>> வார கோபம் தன்னாலே
                  அடங்கிப் போகும் என்னை
                    நீங்க   மிரட்டாதீங்க...!!!

ஆண்<><கண்ணான கண் மணியே
                 என் கட்டழகுப் பெட்டகமே
                 என் ஆசை பெண்ணே
                  பொன்னம்மா=போதுமடி
                  உன் விவாதம்  என்
                  வயிறும் பசிக்குதடி என்
                  உடலும் நடுங்குதடி..!!!

பெண்<>< என் ஆசை மச்சானே என்
                அன்பு மச்சானே ஏங்க
                என் சின்னமச்சானே
               இதோ ==இதோ அரநொடிதான்
               ஆக்கிப் போடுகின்றேன் என்
                செல்ல மச்சானே...!!!!   

ஆண்<><அப்படிச் சொல்லடி என்
               தங்கம்  மீனைத் தூக்கிப்
              போட்டு அறுத்துத்  தாறேன்
           கொண்டு  வாடி  அருவாள...!!

பெண்<><எடுங்கோ=எடுங்கோ மச்சான்
                  நான் இடிக்கபோகின்றேன்
                  பட்ட மிளகாய் =காரசாரமாக
                ஆக்கித் தாறேன் =மச்சானே...!!

ஆண்<><ஏய் புள்ள=ஏய் புள்ள
                    ஓடி வாயென்..!!!

பெண்<><> என்ன மச்சான்.=
                     என்ன மச்சான்...!!

ஆண்<<>மீனுக்குள்ளே மோதிரம்
                  ஒன்று மின்னுது பார்
                 அந்த வானத்து மின்னல்
                 போல் என் கண்ணைப்
               பறிப்பதைப் பார் புள்ள..!!

பெண்<><அப்படியா=அட  ஆமாம்
              ஐயோ மச்சான் அடிச்சது
              அதிஷ்ரம் மச்சானே....!!

(ஆண்
பெண்)  ஆஹ==ஆஹ=இன்று
             நாம் தான்  ராஜா வாங்கோ
          போவோம் விக்க =எடுப்பான
        துணியும் குடிக்க =போத்தலும்
        இது போதும்==இது போதும்
        நமக்கு=ஹாஹா ஆனந்தம்
         ஆனந்தமே...!!!

        

No comments:

Post a Comment