Tuesday 26 January 2016

காதலில் விழுந்த பெண் மனம்

பூவே பூவே
இந்தப் பூவையின்
கதை கேளாயோ.......\

பெண் இவள்
உரைக்கையிலே
பொறுமை
இழக்காமல்
கேளாயோ........\

பூவை என்
உள்ளத்தில்
புகுந்தது ஒரு
முகம் அது நான்
கண்ட திரு முகம்........\

நீ மலர்ந்தது
போல் அன்று
மலர்ந்தது என்
முகம்.......................\

ஆட்டி விடும்
காற்றுக்கு ...நீ
தலை அசைக்காய்
அவன் விட்ட தூதுக்கு
நான் தலை
அசைத்தேன்......................\

தாகம் கொண்ட
காதல் இல்லை  மலரே
மோகம் கொண்ட காதலும்
இல்லை மலரே
ஒருதலைக்
காதலும் இல்லவே
இல்லை மலரே.............\

ஈருடலும் ஓர்
உயிராக  மாறவே
இதயம் துடிக்கும்
காதல்  இது.............\

கலங்கரை
விளக்கமாக
வேண்டும் என்று
இக்குளக்கரையில்
நான் நின்று
புலம்புகின்றேன்
உன்னிடம்
இன்று  பூவே................\

பூவே நீயும்
பெண் இனமே
என் இன்ப நிலை
கண்டு வெட்கம்
கொண்டாயோ
கொஞ்சம்...............\

பல பட்டாம் பூச்சி
பறக்கின்றது
என்னைச்  சுத்தி
கண்னை மூடிப்
பார்க்கையிலே........\

பரந்த நீரிலே
தெளிந்த முகமாய்
தோணுது அவர்
முகம் கண்னைத்
திறக்கையிலே..........\

திருமண நாளிலே
என் மருதாணிக்
கரங்களிலே சிவந்த
முகத்துடன் உன்னை
ஏந்தும் நாளை நீயும்
காண ஆசை கொள்வாயோ
மலரே மலரே..............\

பூவே என் மனக்கோட்டை
வளர்கின்றதே என் மனமோ
காதல் காவியம் வடிக்கின்றதே
காதலில் விழுந்தேன் கால்கள்
நிலம் விட்டுப் பறக்கின்றதே
பெண்மை இவள் உள்ளத்திலும்
உன்னைப் போன்று பல
வண்ணப்பூக்களும் தோணுதே
பூவே  பூவே என்  வாசப் பூவே
என் சுவாசம் அவர்தான் பூவே.......\

 

No comments:

Post a Comment