Tuesday 19 January 2016

செல்பின்


உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உடுத்தும் போதும்
எழுந்து இருக்கும் போதும் 

(செல்பி)

வயது கட்டுப்பாடு இன்றி
வளர்ந்து விட்டது

(செல்பி )
மோகம்  முகநூல் திறந்ததுமே
உருண்டு வருகிறது

( செல்பி )

இதனால் நிறைவது
லைக் கொமஸ் மட்டும் இல்லை
மரணச் செய்தியும் சேர்ந்து

கட்டிப்பிடி வைத்தியம்
பட்டி தொட்டி எல்லாம்
பரவுகிறது குட்டி சுட்டிகளிடமும்
விளையாடுகிறது 

ஒட்டி ஒரசிய படி நிழல்
படமும் நிறையவே
உலாவுகிறது

அன்பான அரவணைப்புக்கும்
வம்பை இழுத்து விடுகிறது

தும்பு போல் நுழைந்து
வீண் தும்மல்களை
கொண்டு வருகிறது

வீட்டுப் பெண்களையும்
விவகாரத்தில் தள்ளி
விடுகிறது

விமர்சனத்தையும்
மெல்ல அள்ளி விடுகிறது

இவைகளை புரிந்தும்
புரியாதவர்கள் போல்
செல்பியின் மோகத்தில்
இருந்து விலகாது
இருப்பது கண்டு
மனவேதனை தருகிறது

முகநூல் காவலன்
கரங்களில் மட்டும் இல்லை
கயவர்கள் கரங்களிலும்
விழிக்கிறது

எடுத்துரைக்க நமக்கும்
முடியவில்லை
உரைத்தாலும் செவி
கொடுக்கும் மன நிலையில்
அவர்கள் இல்லை

புரிந்து நடந்தால் மலிந்து
பொரிந்து கொண்டு
இருக்கும்  வீண் சொல்
குறைந்து விடும்

புரிந்தும் புரியாத
வாறு நடந்து கொண்டால்
முன்னும் பின்னும்
உன்னை முட்ட வரும்
நல்ல செயல் நல்ல பெயர்
கை நழுவி விடும்....////

      

No comments:

Post a Comment