Monday 4 January 2016

காற்றை தூது விட்டேன்

உலா வரும்
தென்றலிடம்
உன் பெயரை
சொல்லிவிட்டேன்.

மலரா எனக் கேட்டது
இல்லை மலையென
பதில் உரைத்தேன்.

மலையில் நட்ட செடி
மொட்டு விடாது
அங்கே  சுகந்தம்  பரவாது
என்றது காற்று.

மலையென அவன்
உருவம்  பனிப்போல்
அவன் உள்ளம்  நுழைந்து
பார் வியர்ந்து விடுவாய்
எனப் பதில் கொடுத்தேன்.

வியர்ந்த காற்று
விரைந்து வருகிறது
உன்னை நோக்கி
உன் சினம் நிறைந்த
நாக்கை சுழட்டி தடை
போட்டு விடாதே அதற்கு.

கொடுத்து இருக்கின்றேன்
என் மூச்சுக்காற்றையும்
கொஞ்சம்  சுவாசித்து விடு
அதையும் சேர்த்து.

என் மூச்சை பேச்சாக
எடுத்து  உளறி விடு
இங்கேயும் கொஞ்சம்
ஏக்கத்தோடு காத்திருக்கு
இந்த வஞ்சியின் நெஞ்சம்.

   

No comments:

Post a Comment