Wednesday 31 August 2016

பாவாடை தாவணியில்

தாவணிப் பெண்ணே
தரை தொடும் தாவணி உடை
காணவே என் கண்கள் தவம்
செய்ததடி இங்கிலாந்து  நாட்டிலே
அது நடக்கவேயில்லையடி இன்று  வரையிலே.

குட்டை உடை கண்டு முகம் சுழித்ததுண்டு
மனக் கட்டுப்பாட்டுடன் நடமாடியது உண்டு
ஒட்டி உரசி நெளியும் பொண்களைக் கண்டு
எட்டி நின்று வெறுப்போடு நோக்கியது உண்டு.
மட்டமான மக்களைக் கண்டு
மனம் வருந்தியதும் உண்டு 
ஏக்கங்களையும் எதிர் பார்ப்புக்களையும் என்
நெஞ்சினில் நிறைத்துக் கொண்டு.

நாடு கடந்து இந்திய மண்ணை மிதித்து
பெருமூச்சு  விட்டு  நிமிர்ந்தேன்
சந்தன சவக்கார வாசனை காற்றுடன்
கலர்ந்து இதமாக தழுவியது என் நாசியை
நுகர்ந்து கொண்டே சற்று தொலைவில்
நோக்கினேன்.

தாவணிப் பெண்ணே தாவியது என்
கண் உன்னை உன் தாவணி உடையைக்
கண்டு  கண் தவம் இருக்கிறது முன்னே
அசைந்து வரும் தேரே அமைதியான பூவே
அடக்க ஒழுக்கமான உடையில் நடை பயின்று
அமைதியான என் ஆசையை தட்டி விட்ட தேவியே.

உன்னால் தேய்யுதடி என் ஆவியே
கிராமத்துப்  பைங்கிளியே இன்னும் நான் தூங்கலயே
உன் வண்ணத்தாவணி என் கண்ணில் நிற்குதடி
உன் வட்ட. முகத்துக்கு கவி பாடியே என்
நாவும் இனிக்குதடி
என் உள்ளே காதல் துள்ளிக் குதிக்குதடி.

வெட்ட வெளி உடலாக சுற்றியவர்களின்
அங்கம் கண்டும் இங்கிலாந்தில் தடுமாறத
காளை மனம் அலை அலையாக
உருளுதடி ஆசையில் புரளுதடி
இடை மறையும் உடை போட்டு
தங்கம் இல்லாத முகம் காட்டி  ஆத்திலே
மஞ்சள்  குளித்த அன்னக்கிளியே.

அச்சம்  மடம் நாணம் இவைகளின்
துணையோடு தரை நோக்கி என்னைக் கடந்தவளே.
உன் தாவணி வலையிலே சிக்கியது என் இதயம்
கொடுவா மீன் போலே கொடுமா கொஞ்சம்
கிராமத்து மஞ்சம் கிரங்கியே போனது நெஞ்சம்.



Wednesday 17 August 2016

கருவாப் பையா

உன் மௌனத்தை உடைச்சி.
மயக்கத்தை உள்ளே அனுப்பி.
விருப்பத்தை அமர்த்தி.
இரக்கத்தை நிறுத்தி.
கருணைவார்த்தைகளைப் பெருக்கி.
காதல் சுவர் கட்டவைக்கப் போறேன்டா
கருவாப்பையா......///

உன் துரு துரு பார்வைக்குள்.
என் முகத்தை முன் அமர்த்தி.
உன் கரு விழிக்கு அதனாலே திரை போட்டு.
உன் புன்னகை  பூத்த இதழ் மேல்.
இந்த பூவையின் பெயரை.
தேனாக இனிக்கும் படி சொல்ல வைக்கப்
போறேன்டா கருவாப்பையா .....///

ரோமத்தை சுமர்ந்த படி  ருத்திர தாண்டவம்
ஆட வைக்கும் கோபத்தை  மறைத்துள்ள
உன் மார்வுக்குள்  என்றும் நிறைந்த
இடமாக என்னை உறங்க வைக்கும்
உன் விருப்பத்தை திறக்க வைக்கப்
போறேனடா கருவாப்பையா ...////

அளந்து பொருள் கொடுத்து
எண்ணிப் பணம் எடுக்கும்.
உன்னிரண்டு கரங்களோடு.
என்னிரண்டு கரங்களையும்
கோர்க்கும் எண்ணத்தை
கூட்டி விடப்போறேனடா கருவாப்பையா ....///

விண் நோக்கி மண் நோக்கி
மரம் நோக்கி மழலையின் கரம் நோக்கி
கவிதை எழுதும் உன்னை என் கண் நோக்கி
கவிதை எழுத வைக்கப் போறேன்டா கருவாப்பையா....///

என் சிரிப்புக்குப் பின்னாடி
சிதறிக்கிடப்பது நீ சிந்தி
நான் பொறுக்கியதாக நினைத்த
கற்பனை முத்தங்கள் தானடா
கருவாப்பையா என் கருவாப்பையா.....///

மறுக்கலிமா?

கூவுற குயிலும் தேடுது பாட்டு
அதில் உன் பெயரை சேர்த்து
என் ராசா அதை நீ மறுத்திடலாமா
என் சோகத்தை வளர்த்திடலாமா 
என் ராசா நீ மறுத்திடலாமா.

என் மனசும்  உன் நினைவில் 
பல ராகம் சொல்லி சொல்லி 
இசை போட்டு தோல்வி கண்டு 
துடிக்குதே என் ராசா இதை நீ
ஏற்றுக்க மறுத்திடலாமா
என்னை வெறுத்திடலாமா. 

இரவு வேளையில் நடு சாமத்திலே
கனவில் உன் முகம் வந்து ஆசை
கூட்டுது இதை நான் கூற வரும்
நேரத்தில் நீ செவி கொடுக்காது
மறுத்திடலாமா என் ராசா
வெறுத்திடலாமா. 

நீ பச்சரிசி  நான் அச்சு வெல்லம்
நாம் சேர்ந்தால் தான் அதிரசம் 
புரிஞ்சுக்கோ ராசா  கொஞ்சம் 
புரிஞ்சுக்கோ ராசா நான்
சொல்ல வரும் போது நீ வெறுக்கலாமா
என் ராசா மறுக்கலாமா.????

புரியவில்லை

வளியவனாக. எளியவனாக
வாழ வேண்டாம்  என்று
நீண்ட வழி பயணம் சென்றான்.

அரவயிறு கா வயிறு உணவு உண்டு
அரத்தூக்கம் முழுத்தூக்கம் விழித்து
பணம் தேட முயன்றான்.

நாடு விட்டு நாடு சென்று தன்
நலம் பாராது உடலை வருத்தி
உழைத்தான்.

தெரியாத மொழி அறியாத தொழில்
தன் கஷ்ரம்  தீரவே சிரமம் கொண்டு
கற்றுக் கொண்டான்.

மனைவி மக்கள் மனையில்
மகிழ்வாக வாழவேண்டும்
என்று நாளும் பொழுதும்
நினைத்துக் கொண்டான்.

சொத்து சேர்க்கவே தன் உடல்
நலம் காக்க மறந்தான் எறும்பாக
தேய்ந்து பல ஆண்டு உழைத்தான்  .

வங்கியில் பணம் தங்கியது
மனைவிக்கு தங்கம் மின்னியது
வீடு பெருத்தது ஊரும் மதித்தது
இத்தனையும் கண்டு நிம்மதி
மூச்சு விட்டான்.

துக்கம் துயரம் மறந்து
மனதிலே மகிழ்ந்தான்.
வழி தவறிய மனைவியினாலே
வலிமை அடைந்தான்.

விபரிதமான முடிவுக்கு வந்தான்
கூடவே இருந்த நண்பர்களின்
கண்ணிலே அதிர்ச்சி
ஒளி கொடுத்தான்.

உறவுகளுக்கு  மறக்க முடியா
வலி கொடுத்தான் கை அசைத்து
வந்த பாதையிலே பாடை
வழி சென்றான். 

தன் மானம் காக்கவா
அவமானம் போக்கவா
எதற்காக இந்த முடிவு எடுத்தான்
புரியாத புதிர்தான் எனக்கும் .

(குறிப்பு)   அரபி நாட்டு தொழிலாளி  தன்
மனைவி வேறு நவருடன் சென்றதை
அறிந்ததும் எடுத்த முடிவு இவை 
வேதனையான செய்தி தற்கொலை
என்பது சரியான தேர்வு அல்ல. ////

போய்யா போ

இரண்டு இரண்டாக அனைத்தையும்
வாங்கி இல்லத்தில் உள்ளோருக்கெல்லாம்
இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்து வந்த மன்னவரே.

இருண்டு போனதையா உன்
இரட்டிப்பின் ஆசையின் அர்த்தம்  கண்டு.

வீட்டுக்கு வெளியே எங்கும்  உன் பேச்சு
வீதி ஓரம் எல்லாம் கசமுசாவாச்சு .
விம்மி அழவும் தென்பு இல்லை கலங்கிய
கண்ணோடு நானும் அமர்ந்தாச்சு.
வித்தகன்  உன் நடத்தை புரியாமலே தற்பெருமை
பேசிமகிழ்ந்த பாவி நானாச்சு .....///

நீ கொள்ளையிட்டுக் கொண்டு வரவில்லை.
நீ கொலை செய்து பறிக்கவில்லை  என
நம்பிக்கை  கொண்டேன் மனம் பூரித்து
நின்றேன்  அன்று ....///

என் கணிப்பு தவறானதையா கொள்ளை
போனது நீயேதான் என்று அறியாமலே
போய் விட்டதையா ..../////

உன்னைக் கொள்ளையிட்ட இரண்டாம்
தாரத்துக்கான பொருட்களை என் இல்லத்திலே.
நீ சேகரித்ததை அறிந்து என் நெஞ்சம்
எரிமலை போல் குமுறுதையா .....////

இரண்டு இரண்டு என்று இரண்டு
வீட்டுக்கு வேலியாக போன உன்னை
இன்றோடு தள்ளி வைக்கின்றேன் நான்
வீட்டுக்கு வெளியே   போய்யா ...////

     

எப்படி துணிந்தாய்

என்னவளே என் இனியவளே
காதல் என்று சொன்னால்
கண்ட படி மிரட்டுபவளே  .

கடுகு  அளவும் காதல் பிடியாது
என்று சொன்னவளே கண்ணா
பின்னா என என்னைத் திட்டிய
சின்னவளே.

கனியாத காதலாக என் காதல்
ஏங்க கண்டும் காணாது போல்
சென்றவளே.

என்ன மாயமடி மந்திரமடி
அந்த மச்சக்காரன் உனக்கு
செய்தானோடி என்னவளே.

முறுக்கு மீசைக் காரன்
முறுக்கித்து நடமாடும் போது
உசாராகி இருக்க வேண்டும்
நானடி இளையவளே.

புரியாமல் போனதடி எனக்கும்
இனிது இனிது காதல் இனிது
என்று காதல் வசனம் உரைப்பாய்
நீ என்று பெண்மயிலே

துணிந்தாயடி துணிந்தாயடி
துணைவன் அவன் என்று
கூறி தூரமாக பறந்தாயே
என் மாமன் மகளே.

கனியாத என் காதல் கனவாக போனதடி
நான் காத்திருந்த பெண் புறாவோ
எனை பாராது அவனோடு ஜோடி போட்டதடி
பெண்ணே துணிந்தாயடி தையிரியமாக
காதல் புரிந்து வென்றாயேடி பிரிவாலே
நான் வருந்தி மது அருந்துகிறேன்
உன்னாலேடி என்னை உதறியவளே.

    

எதை நோக்கிப் போகிறது சுதந்திரம்


எங்கு இல்லை
எதில் இல்லை
சுதந்திரம்
என்னும்
வார்த்தை.

அவை
சோர்ந்து
போகின்றது
அரச
தந்திரங்களால்.

ரத்தத்தின்
ரத்தமென
மேடைக்கு
மேடை பேச்சி.

மொத்தத்தில்
மொழியால்
பிரித்து
தமிழனுக்கு
எதிலும் வழி
இல்லாது போச்சி.

முன்னேற்றுவேன்
முன்னேற்றுவேன்
நாட்டை என்று
அரசியலின்
தாகை மந்திரம்

விலை ஏற்றி
விலை ஏற்றியே
வீனாகப்
போகின்றது
கூழிகளின்
அன்றாட
வாழ்வு
மாத்திரம்

சுதந்திரம்
இல்லை
அதை நாடி
ஓடுவோருக்கு
சோறும் இல்லை.

எதை நாடிப்
போகின்றதோ
இந்த
சுதந்திரம்
என்னும் சொல்.

எங்கும் ஊழல் 
அரச
காரியாலயத்தில்
நுழைந்ததுமே
தேடல்
உருப்படியாக
ஒரு காரியம்
துட்டு இன்றி செய்ய
வழி உண்டா.

பக்கத்துக்குப்
பக்கம்
பொதுச் சேவை
என்று
அறிவிப்பு பலகை.

அங்கே
பொத்திய
வண்ணம்
அபகரிக்கான்
ஏழையின்
கை இருப்பை.

இதில் மனிதனுக்கு
எங்கே சுதந்திரம்.

பாதைக்குப்
பாதை மதுக்
கடை நடை பாதையிலே
நடக்கவே
மாதுக்குக்  தடை.

போதையில்
தள்ளாடும்
பித்தர்கள்
தாவணி
தொட்டு இழுப்பான்
என்னும்
அச்சம்  இதில்
பெண்ணுக்கு எங்கே
சுதந்திரம் .

நினைத்த
நேரத்தில்
பாதையில்
நடக்கத் தடை

நினைத்த படி வாழ
சமூதாயத்தில் தடை
சுதந்திரம் என்னும்
வார்த்தை சொல்
அளவுதான்
அவை பறந்து
விட்டது பல விதத்திலும்
சில மதத்திலும்.

எது? நிர்வாணம்

ஆதி மனிதன்  உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன்   உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன்  பிறந்தான்
(அ )னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

அக்காலம் முதல் இக்காலம் வரை
சேத்தை மிதித்து சோத்துக்கு வழி
காட்டும்  விவசாகிக்கு ஒரு முளக் கோமணம் 
தான் உடலுக்கு உடை.

உண்டி சுருங்குதல் பெண்டிக்கு அழகு
என்பது பழ மொழி.
உடையைச் சுருக்கி பணத்தைச் சேர்க்க
பெண்கள் கண்ட வழி சினிமா  என்னும்  புது மொழி.

ஆபாசங்கள் தலை விரித்தாடுது.
அரை குறையான உடையின் விலை
தலைக்கு மேல் போகிறது.

சேத்தை மிதித்து நாத்து நடும் போது
சேலை சரிந்தால் அதைக் காண்பவர்
நெஞ்சம் சஞ்சலம் அடைவதில்லை.

அள்ளிப் பூசிய வர்ணனையோடு
கிள்ளிப் பார்க்கவும் நொள்ளி  விளையாடும் விதமும்
இடை இடையே இடம் விட்ட உடை போட்டு துள்ளி
அடும் போது  தான் சஞ்சலப்படுகிறது நெஞ்சம்.

அகண்ட வானமும் உலாவும் நிலாவும்
உடைகள் அணிவதில்லை.
ஞானிகளும் துறவிகளும் ஆடைக்கு
முன் உரிமை கொடுப்பதில்லை.

விண்ணும் மண்ணும் தடை இல்லா உலகம்
காற்றும் மழையும்  மூடி மறைக்காத ஒன்று
இத்தனையும் நிர்வாணமாக கொண்டு
நகர்கிறது நாளும் பொழுதும்   என்றும்
நிம்மதி இல்லாத மனமும்  ஒரு
வகையில் நிர்வாணம் தான்.

 

Tuesday 16 August 2016

அன்றில்கள்

அன்புத்தோழியே
நீ சென்ற பின் ஆயிரம்
தோழிகள் உள்ளதடி
ஆனால் உன் போல்
கை கொடுத்து
கண்ணீர் துடைக்க
ஒருத்தி இல்லையடி...!!!

சிறு வயது முதல்
சுரட்டையில் மண்
சோறு சமைத்து
விளையாடினோம்
கடலோரம் நண்டு
பிடித்து விளையாடினோம்
புல்  வெளியில்
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடினோம்
அந்த அன்பு தொடர்ந்ததடி
பருவவயது வரும் வரை..!!

பூப்பெய்த பின் பல்லாங்குழி
விளையாடினோம்
தாயக்கட்டை  சொக்கட்டான்
விளையாடினோம் கல்லுரியில்
பல பேரை கலாய்த்தோம்
அன்று நம் இரு கையும் பிரிந்தது
இல்லையடி...!!!!

பருவ வயதின் கோளாறு
நீ மட்டும் பிரிந்து
விளையாடினாய் காதல்
விளையாட்டு என்னவன்
வருகின்றான் நான் போய்
வருகின்றேன் என்று கூறி
மெது மெதுவாக என் கரம்
விட்டுப் பிரிந்தாயடி அப்போது
எனக்குப் புரியவில்லையடி
பிரிவின் வலி...!!!

என் கரம் விட்டு அவன்
கரம் பிடித்தாய் பதவி
கொடுத்த பணம் தேடி
பட்டணம் சென்றாய்
நான் மட்டும் உன் நிழல்
படம் பார்த்த வண்ணம்
நீயும் நானும் ஓடி விளையாடிய
கிராமத்து மண்ணைப் பார்த்து
ஏங்குகின்றேன் ஒன்று மட்டும்
புரிகின்றதடி பெண்ணுக்கு
எதுவும் நிரந்தரம் இல்லை...!!!

     
         

ஒற்றை ரோஜா

ஒத்தையடிப் பாதை  வழி 
புத்தகம்  சுமந்த படி
நான்  போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும்  வண்ணம்
புன்னகை புரிந்தான்.

கொத்தோடு முள் இருந்த.
ஒற்றை ரோஜா மலரைக்  கொடுத்து
மொத்தமாக. என்னை
கொள்ளை கொண்டான்.
சின்ன ரோஜா மலர்
சுகந்தம் பரப்ப. மெல்லமாக.
என் சிவந்த. இதழ் இரண்டும் 
சின்னதாய் முத்தம்  பதிக்க

அப்போது  மலர் கொடுத்து 
ஆவலாக நோக்கிய
அத்தை  மகன் வெட்கம் கொண்டான்
முத்தம்  தன்னிடம் இருந்து 
தவறியதால்  துக்கம்  கொண்டான்.
நான்  மெதுவாக நகர்ந்தேன்
தலையை சாத்த வாறு 

அடுக்கிய புத்தகம்  நடுவே 
ரோஜாவை மறைத்து வைத்து
மாந்தோப்பு  வழியே  நடந்தேன்.
நினைவுகள் பின் நோக்கியே சென்றது
அத்தை மகன் ஒற்றை மலரோடு 
நின்ற காட்சி மீண்டும்  கண்ணில் உதயமாச்சு.

உதிராத காதலுக்கு உதவிட வந்த. ஒற்றை மலரே
என் உதிரம் கொண்ட வண்ணத்தில்
எதிரே வந்த ரோஜா மலரே மலர்களின் ராஜா 
என் ராஜன் கொடுத ஒற்றை மலரே
இன்று முதல்  உமக்கு  மெத்தை இட்டேன் 
என் புத்தகம்  நடுவே. ...//

   

தேவதை


செவ்வந்தி  இதழ் சுமந்த பெண்ணே.
சிக்கனம் இன்றி சிவந்த கண்ணே.
என்னை சிக்கனப் பிடித்து விட்டாயேடி
பெண்ணே அடி கண்ணே.

சிட்டாகப் பறக்கும் பெண்ணே நீ
சிக்கனமாகச் சிரிப்பதும் ஏனோ?
கண்ணே அடி பெண்ணே.

வெட்கத்தால் வேலி கட்டி நாணத்தால்
கதவு போட்டு நான் நுழைய முயலும்
போது தடை போடும் பெண்ணே.
உன் சின்ன முகம் பார்க்க ஏங்குதடி
என் க (ண்) ணே.

தூக்கணாங்குருவிக் கொண்டைக் காரி
உன்னைத் தூக்கி நான் ஆட  அதைப்பார்த்து
ரசிக்கவே  இந்த அருவியும் ஏங்குதடி.

கரையும் என் ஆசை எல்லாம்
தரை புரண்டு ஓடுதடி  தலை தூக்கி
பாராமல் நீயும் தரை நோக்கி நகருவதும்
நியாயமோடி?

என் மனதை உன்னிடம்  பம்பரமாக
சுத்த விட்டு பின் புரமாக நான் தொடரும்
வேளையிலே  என் தொடைநடுங்கிப்
பயம் வந்து தொல்லை கொடுக்குதடி
வெட வெடத்துப் போன பாதம் இரண்டும்
வேண்டாம் என்று நடையை நிறுத்துதடி.

காதலில் விழுந்த என் மனம் கண்டு
அதிகமாகத் துடிக்கிறது இதயமடி
உனக்கு அருகதை அற்றவனாகப்
போனேனோ என்று நினைக்கையிலே
விழியிலும் அருவி பெருகுதடி.

நானும் உன்னைத் தொட்டு
நீயும் நாணம்  விட்டு  நாம்
என்ற மாலை கட்டி இன்பத் தேன்
சொட்டு  கொட்டப் போவது எப்போ.?

எப்போ  ?எப்போ? என அதை
நினைத்து நினைத்து என்
நெஞ்சம்  ஏங்குதடி பெண்ணே
அடி கண்ணே...........///// 

கனவோடு வருகிறாய்

அவன் எல்லோருக்கும்  நல்லவன்

எனக்கு அவனோ இனியவன்.

எழிலழகைச்  சார்ந்தவன்.

உள்ளத்தால் சிறந்தவன்.

வேல் கொண்டு வினை தீர்க்கும்
முருகன் இல்லை.

அன்பால் அரவணைக்கும் தவப்புதல்வன்.

தீ கொண்டு சுடர் ஏற்றத் தேவை இல்லை.

சுடர் ஒளியாய் அவன் விழிகள்.

மலைகளில் தஞ்சம் அடைந்த வள்ளி
மணவாலன் இல்லை.

ஆழ் கடலின் ஓசையுடன் சங்கமைத்த
மண்ணின் மைந்தன்.

அவன்  தேன் தமிழை சுவைப்பதிலே
பெரும் தலைவன்.

திருத்தமாக தமிழை நிறுவும் செந்தமிழன்.

தாய்க்குத்  தனி மகன் சிந்தனையில்
சிறந்த மகன்.

தாடி  மேல்  அவனுக்கோ மோகம்.

தாவணி மேல் இல்லை தாகம்.

பக்த்தியும் இல்லை பெத்தவளை
ஒத்தி வைப்பதும் இல்லை.

கண்ணும் கருத்தும்அவன் கடமை

எண்ணும் எழுத்தும்அவன் உடமை.

என்னையும் கவர்ந்தான் இதனால்.

உள்ளத்தில்  பதிந்தான் தமிழால்.

தமிழை சிதைப்பவளையும் கவி
புனைய. வைத்தான்.

பலஅரங்கங்களிலும் தலை நிமிர
வைத்தான் .

இன்றும் மறக்க மனம் இல்லை
இறுக்கமான பிடியிலே அவன்
எண்ணம் .
தினமும்  கனவிலும் வருகிறான் .
நிறுத்தாமல் நினைவிலும்
தொடர்கின்றான்.

 

உன்னால் உயித்திடுவேன்

தினமும் இறப்பது
போன்று கனவு உண்டு
ஆனால் உன் நினைவால்
உயித்தெழுகிறேன்.
பொல்லாத சமுதாயம்
கொல்லாமல் கொல்லுது.
இருந்தும்  உன் அன்பு வரம்
பெறவே உயிர் வாழ்கிறேன் .,

நீ கொடுக்கும் ஆசை
முத்தம் சேகரிக்கவும்.
உன் தோள் சாய்ந்து
கதை அளக்கவும்.
வேண்டும் என்று
வேண்டாம் என்று சொல்லாமல்.
உயிர் மூச்சுக்காற்றைப்
பிடித்து உயிர் வாழ்கிறேன்.

விக்கல் வரும் போது
எல்லாம்  உன் சொற்கள் .
வந்து முட்டுகிறது
நெஞ்சினிலே மின்னலாய்.
மீண்டும்  உன் குரல்
வழி உரை கேட்கவே.
மரண வாசல் தேடும்
என் ஜீவனை பிடித்து வாழ்கிறேன்.

வேட்டைக் காரன் போல் நீ என்னை .
காதலால் வாட்டி கை விட்ட போதும்.
கலங்கும் விழிகள்
காத்திருக்கிறது உன்னை.
முகம் பார்க்க என்பதற்காகவே
இமை மூடாது வாழ்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக
இறக்கிறது உனை
சுமக்கும் இதயம்.
மெது மெதுவாக
மடிகிறது ஆசையோடு
எதிர் பார்த்த உள்ளம்.
சோர்ந்து போகிறது
நீ தான் சொந்தம் என
நினைத்த பெண்மை.
வயதும் படிப்படியாக
காட்டுகின்றது காட்டு வாழி
ஆனாலும் நான் வாழ்கிறேன்.

நீ சொல்லி விடு என்
துணை நீதான் பெண்ணே என்று
இத்தனை வேதனைக்கும்
ஒரு சவால் விட்டு..
பனித்துளி கண்டு
நிமிர்ந்த புல் போல் நிமிர்ந்து
உயித்தெழுகின்றேன்
உன்னால்  உன்னாலே தான்
உயிர்திடுவேன் .என் நாளும்.

Friday 12 August 2016

புரியாத நிலையில் நான்

வளியவனாக. எளியவனாக
வாழ வேண்டாம்  என்று
நீண்ட வழி பயணம் சென்றான்.

அரவயிறு கா வயிறு உணவு உண்டு
அரத்தூக்கம் முழுத்தூக்கம் விழித்து
பணம் தேட முயன்றான்.

நாடு விட்டு நாடு சென்று தன்
நலம் பாராது உடலை வருத்தி
உழைத்தான்.

தெரியாத மொழி அறியாத தொழில்
தன் கஷ்ரம்  தீரவே சிரமம் கொண்டு
கற்றுக் கொண்டான்.

மனைவி மக்கள் மனையில்
மகிழ்வாக வாழவேண்டும்
என்று நாளும் பொழுதும்
நினைத்துக் கொண்டான்.

சொத்து சேர்க்கவே தன் உடல்
நலம் காக்க மறந்தான் எறும்பாக
தேய்ந்து பல ஆண்டு உழைத்தான்  .

வங்கியில் பணம் தங்கியது
மனைவிக்கு தங்கம் மின்னியது
வீடு பெருத்தது ஊரும் மதித்தது
இத்தனையும் கண்டு நிம்மதி
மூச்சு விட்டான்.

துக்கம் துயரம் மறந்து
மனதிலே மகிழ்ந்தான்.
வழி தவறிய மனைவியினாலே
வலிமை அடைந்தான்.

விபரிதமான முடிவுக்கு வந்தான்
கூடவே இருந்த நண்பர்களின்
கண்ணிலே அதிர்ச்சி
ஒளி கொடுத்தான்.

உறவுகளுக்கு  மறக்க முடியா
வலி கொடுத்தான் கை அசைத்து
வந்த பாதையிலே பாடை
வழி சென்றான். 

தன் மானம் காக்கவா
அவமானம் போக்கவா
எதற்காக இந்த முடிவு எடுத்தான்
புரியாத புதிர்தான் எனக்கும் .

(குறிப்பு)   அரபி நாட்டு தொழிலாளி  தன்
மனைவி வேறு நவருடன் சென்றதை
அறிந்ததும் எடுத்த முடிவு இவை 
வேதனையான செய்தி தற்கொலை
என்பது சரியான தேர்வு அல்ல. ////

போய்யா போ

இரண்டு இரண்டாக அனைத்தையும்
வாங்கி இல்லத்தில் உள்ளோருக்கெல்லாம்
இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்து வந்த மன்னவரே.

இருண்டு போனதையா உன்
இரட்டிப்பின் ஆசையின் அர்த்தம்  கண்டு.

வீட்டுக்கு வெளியே எங்கும்  உன் பேச்சு
வீதி ஓரம் எல்லாம் கசமுசாவாச்சு .
விம்மி அழவும் தென்பு இல்லை கலங்கிய
கண்ணோடு நானும் அமர்ந்தாச்சு.
வித்தகன்  உன் நடத்தை புரியாமலே தற்பெருமை
பேசிமகிழ்ந்த பாவி நானாச்சு .....///

நீ கொள்ளையிட்டுக் கொண்டு வரவில்லை.
நீ கொலை செய்து பறிக்கவில்லை  என
நம்பிக்கை  கொண்டேன் மனம் பூரித்து
நின்றேன்  அன்று ....///

என் கணிப்பு தவறானதையா கொள்ளை
போனது நீயேதான் என்று அறியாமலே
போய் விட்டதையா ..../////

உன்னைக் கொள்ளையிட்ட இரண்டாம்
தாரத்துக்கான பொருட்களை என் இல்லத்திலே.
நீ சேகரித்ததை அறிந்து என் நெஞ்சம்
எரிமலை போல் குமுறுதையா .....////

இரண்டு இரண்டு என்று இரண்டு
வீட்டுக்கு வேலியாக போன உன்னை
இன்றோடு தள்ளி வைக்கின்றேன் நான்
வீட்டுக்கு வெளியே   போய்யா ...////