Tuesday 2 August 2016

காதல் படகு

இந்து சமுத்திரம்  போல் என் மனம்
அதில் ஆழத்தைப் பார்க்க
அவள் போட்டாளே துடுப்பு --/

ஒற்றைக் கல் மூக்குத்தியாலே முதல் துடுப்பு  மெதுவாக ஆட்டம் கொண்டேன்..../

ஒட்டுப்போட்டோடு பட்டு உடுத்தி
போட்டாள் இரண்டாம்   துடுப்பு
உடன் ஆசை அலை எழுந்தது அவசரமாக ---/

வண்ண மலர் கூடை சுமந்து வந்து
என் எண்ணத்தை சிதைத்தாளே மூன்றாம் துடுப்பாக ...../

தடுத்து நிறுத்த முடியாத படி
உடைத்து ஓடுது உள்ளக் கடலிலே காதல் படகு .../

     

No comments:

Post a Comment