Tuesday 16 August 2016

அன்றில்கள்

அன்புத்தோழியே
நீ சென்ற பின் ஆயிரம்
தோழிகள் உள்ளதடி
ஆனால் உன் போல்
கை கொடுத்து
கண்ணீர் துடைக்க
ஒருத்தி இல்லையடி...!!!

சிறு வயது முதல்
சுரட்டையில் மண்
சோறு சமைத்து
விளையாடினோம்
கடலோரம் நண்டு
பிடித்து விளையாடினோம்
புல்  வெளியில்
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடினோம்
அந்த அன்பு தொடர்ந்ததடி
பருவவயது வரும் வரை..!!

பூப்பெய்த பின் பல்லாங்குழி
விளையாடினோம்
தாயக்கட்டை  சொக்கட்டான்
விளையாடினோம் கல்லுரியில்
பல பேரை கலாய்த்தோம்
அன்று நம் இரு கையும் பிரிந்தது
இல்லையடி...!!!!

பருவ வயதின் கோளாறு
நீ மட்டும் பிரிந்து
விளையாடினாய் காதல்
விளையாட்டு என்னவன்
வருகின்றான் நான் போய்
வருகின்றேன் என்று கூறி
மெது மெதுவாக என் கரம்
விட்டுப் பிரிந்தாயடி அப்போது
எனக்குப் புரியவில்லையடி
பிரிவின் வலி...!!!

என் கரம் விட்டு அவன்
கரம் பிடித்தாய் பதவி
கொடுத்த பணம் தேடி
பட்டணம் சென்றாய்
நான் மட்டும் உன் நிழல்
படம் பார்த்த வண்ணம்
நீயும் நானும் ஓடி விளையாடிய
கிராமத்து மண்ணைப் பார்த்து
ஏங்குகின்றேன் ஒன்று மட்டும்
புரிகின்றதடி பெண்ணுக்கு
எதுவும் நிரந்தரம் இல்லை...!!!

     
         

No comments:

Post a Comment