Wednesday 17 August 2016

எது? நிர்வாணம்

ஆதி மனிதன்  உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன்   உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன்  பிறந்தான்
(அ )னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

அக்காலம் முதல் இக்காலம் வரை
சேத்தை மிதித்து சோத்துக்கு வழி
காட்டும்  விவசாகிக்கு ஒரு முளக் கோமணம் 
தான் உடலுக்கு உடை.

உண்டி சுருங்குதல் பெண்டிக்கு அழகு
என்பது பழ மொழி.
உடையைச் சுருக்கி பணத்தைச் சேர்க்க
பெண்கள் கண்ட வழி சினிமா  என்னும்  புது மொழி.

ஆபாசங்கள் தலை விரித்தாடுது.
அரை குறையான உடையின் விலை
தலைக்கு மேல் போகிறது.

சேத்தை மிதித்து நாத்து நடும் போது
சேலை சரிந்தால் அதைக் காண்பவர்
நெஞ்சம் சஞ்சலம் அடைவதில்லை.

அள்ளிப் பூசிய வர்ணனையோடு
கிள்ளிப் பார்க்கவும் நொள்ளி  விளையாடும் விதமும்
இடை இடையே இடம் விட்ட உடை போட்டு துள்ளி
அடும் போது  தான் சஞ்சலப்படுகிறது நெஞ்சம்.

அகண்ட வானமும் உலாவும் நிலாவும்
உடைகள் அணிவதில்லை.
ஞானிகளும் துறவிகளும் ஆடைக்கு
முன் உரிமை கொடுப்பதில்லை.

விண்ணும் மண்ணும் தடை இல்லா உலகம்
காற்றும் மழையும்  மூடி மறைக்காத ஒன்று
இத்தனையும் நிர்வாணமாக கொண்டு
நகர்கிறது நாளும் பொழுதும்   என்றும்
நிம்மதி இல்லாத மனமும்  ஒரு
வகையில் நிர்வாணம் தான்.

 

No comments:

Post a Comment