Tuesday 9 August 2016

வாடும் ஜீவன்

சிரிப்பாலே என்னை எட்டி விட்டான்.
சிறப்பான உரையாலே என் உள்ளம் தொட்டு விட்டான்.
சிறந்த கவியாலே என்னைக் கட்டி விட்டான்.
சில நாளாக ஏனோ எட்டியே நின்று விட்டான்.

கருத்தான கண்ணன் அவன்.
கறுப்பான மன்னன் அவன்.
கள்ளம் கபடம் இல்லா நல்லவன் அவன்.
கவிஞர்களே வியர்ந்து பார்க்கும் கவிஞன் அவன்.

பாசமான ஆண் தான்
பார்வைக்கோ தோற்றம்  பயந்தான்.
பார்த்து நெரிங்கிப் பழகுவோருக்கு பச்ச மரந்தான்.
பார்த்தும் பாராது போவேனோ நான் தான்.

மட்டம் தட்டிக் காட்டவும் ஆள் இல்லை.
மடையன் என்று மார்பு உயர்த்துவோரும் இல்லை.
மடித்த வெள்ளைக் காகிதம் போல் பிள்ளை.
மறக்கத்தான் எனக்கும் மனம் இல்லை.

விருப்பங்கள் நிறையவே உண்டு .
விரும்பாத அவனைக் கண்டு ஏங்குது விழி இரண்டு .
விம்மி அழுகிறேன் தனிமை கொண்டு.
விளையாட்டாக கட்டிய கற்பனை வீடு

(காதலாக போனது நெஞ்யோடு.)

பட்டதாரி பட்டங்களை விரும்பாத ஆரி.
பகட்டு வாழ்வு அசட்டு சிரிப்பு ஒட்டாதவர் -சாரி.
பந்தமாய் சொந்தமாய் நீ வந்தால் சொரிவேன் பூவை வாரி.
பட்டினியாய் வாடுது என் ஜீவன் உன்னாலே தான் மாரி.

                

No comments:

Post a Comment