Friday, 12 August 2016

புரியாத நிலையில் நான்

வளியவனாக. எளியவனாக
வாழ வேண்டாம்  என்று
நீண்ட வழி பயணம் சென்றான்.

அரவயிறு கா வயிறு உணவு உண்டு
அரத்தூக்கம் முழுத்தூக்கம் விழித்து
பணம் தேட முயன்றான்.

நாடு விட்டு நாடு சென்று தன்
நலம் பாராது உடலை வருத்தி
உழைத்தான்.

தெரியாத மொழி அறியாத தொழில்
தன் கஷ்ரம்  தீரவே சிரமம் கொண்டு
கற்றுக் கொண்டான்.

மனைவி மக்கள் மனையில்
மகிழ்வாக வாழவேண்டும்
என்று நாளும் பொழுதும்
நினைத்துக் கொண்டான்.

சொத்து சேர்க்கவே தன் உடல்
நலம் காக்க மறந்தான் எறும்பாக
தேய்ந்து பல ஆண்டு உழைத்தான்  .

வங்கியில் பணம் தங்கியது
மனைவிக்கு தங்கம் மின்னியது
வீடு பெருத்தது ஊரும் மதித்தது
இத்தனையும் கண்டு நிம்மதி
மூச்சு விட்டான்.

துக்கம் துயரம் மறந்து
மனதிலே மகிழ்ந்தான்.
வழி தவறிய மனைவியினாலே
வலிமை அடைந்தான்.

விபரிதமான முடிவுக்கு வந்தான்
கூடவே இருந்த நண்பர்களின்
கண்ணிலே அதிர்ச்சி
ஒளி கொடுத்தான்.

உறவுகளுக்கு  மறக்க முடியா
வலி கொடுத்தான் கை அசைத்து
வந்த பாதையிலே பாடை
வழி சென்றான். 

தன் மானம் காக்கவா
அவமானம் போக்கவா
எதற்காக இந்த முடிவு எடுத்தான்
புரியாத புதிர்தான் எனக்கும் .

(குறிப்பு)   அரபி நாட்டு தொழிலாளி  தன்
மனைவி வேறு நவருடன் சென்றதை
அறிந்ததும் எடுத்த முடிவு இவை 
வேதனையான செய்தி தற்கொலை
என்பது சரியான தேர்வு அல்ல. ////

No comments:

Post a Comment