Friday, 12 August 2016

போய்யா போ

இரண்டு இரண்டாக அனைத்தையும்
வாங்கி இல்லத்தில் உள்ளோருக்கெல்லாம்
இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்து வந்த மன்னவரே.

இருண்டு போனதையா உன்
இரட்டிப்பின் ஆசையின் அர்த்தம்  கண்டு.

வீட்டுக்கு வெளியே எங்கும்  உன் பேச்சு
வீதி ஓரம் எல்லாம் கசமுசாவாச்சு .
விம்மி அழவும் தென்பு இல்லை கலங்கிய
கண்ணோடு நானும் அமர்ந்தாச்சு.
வித்தகன்  உன் நடத்தை புரியாமலே தற்பெருமை
பேசிமகிழ்ந்த பாவி நானாச்சு .....///

நீ கொள்ளையிட்டுக் கொண்டு வரவில்லை.
நீ கொலை செய்து பறிக்கவில்லை  என
நம்பிக்கை  கொண்டேன் மனம் பூரித்து
நின்றேன்  அன்று ....///

என் கணிப்பு தவறானதையா கொள்ளை
போனது நீயேதான் என்று அறியாமலே
போய் விட்டதையா ..../////

உன்னைக் கொள்ளையிட்ட இரண்டாம்
தாரத்துக்கான பொருட்களை என் இல்லத்திலே.
நீ சேகரித்ததை அறிந்து என் நெஞ்சம்
எரிமலை போல் குமுறுதையா .....////

இரண்டு இரண்டு என்று இரண்டு
வீட்டுக்கு வேலியாக போன உன்னை
இன்றோடு தள்ளி வைக்கின்றேன் நான்
வீட்டுக்கு வெளியே   போய்யா ...////

     

No comments:

Post a Comment