Wednesday 31 August 2016

பாவாடை தாவணியில்

தாவணிப் பெண்ணே
தரை தொடும் தாவணி உடை
காணவே என் கண்கள் தவம்
செய்ததடி இங்கிலாந்து  நாட்டிலே
அது நடக்கவேயில்லையடி இன்று  வரையிலே.

குட்டை உடை கண்டு முகம் சுழித்ததுண்டு
மனக் கட்டுப்பாட்டுடன் நடமாடியது உண்டு
ஒட்டி உரசி நெளியும் பொண்களைக் கண்டு
எட்டி நின்று வெறுப்போடு நோக்கியது உண்டு.
மட்டமான மக்களைக் கண்டு
மனம் வருந்தியதும் உண்டு 
ஏக்கங்களையும் எதிர் பார்ப்புக்களையும் என்
நெஞ்சினில் நிறைத்துக் கொண்டு.

நாடு கடந்து இந்திய மண்ணை மிதித்து
பெருமூச்சு  விட்டு  நிமிர்ந்தேன்
சந்தன சவக்கார வாசனை காற்றுடன்
கலர்ந்து இதமாக தழுவியது என் நாசியை
நுகர்ந்து கொண்டே சற்று தொலைவில்
நோக்கினேன்.

தாவணிப் பெண்ணே தாவியது என்
கண் உன்னை உன் தாவணி உடையைக்
கண்டு  கண் தவம் இருக்கிறது முன்னே
அசைந்து வரும் தேரே அமைதியான பூவே
அடக்க ஒழுக்கமான உடையில் நடை பயின்று
அமைதியான என் ஆசையை தட்டி விட்ட தேவியே.

உன்னால் தேய்யுதடி என் ஆவியே
கிராமத்துப்  பைங்கிளியே இன்னும் நான் தூங்கலயே
உன் வண்ணத்தாவணி என் கண்ணில் நிற்குதடி
உன் வட்ட. முகத்துக்கு கவி பாடியே என்
நாவும் இனிக்குதடி
என் உள்ளே காதல் துள்ளிக் குதிக்குதடி.

வெட்ட வெளி உடலாக சுற்றியவர்களின்
அங்கம் கண்டும் இங்கிலாந்தில் தடுமாறத
காளை மனம் அலை அலையாக
உருளுதடி ஆசையில் புரளுதடி
இடை மறையும் உடை போட்டு
தங்கம் இல்லாத முகம் காட்டி  ஆத்திலே
மஞ்சள்  குளித்த அன்னக்கிளியே.

அச்சம்  மடம் நாணம் இவைகளின்
துணையோடு தரை நோக்கி என்னைக் கடந்தவளே.
உன் தாவணி வலையிலே சிக்கியது என் இதயம்
கொடுவா மீன் போலே கொடுமா கொஞ்சம்
கிராமத்து மஞ்சம் கிரங்கியே போனது நெஞ்சம்.



No comments:

Post a Comment