Wednesday 17 August 2016

எப்படி துணிந்தாய்

என்னவளே என் இனியவளே
காதல் என்று சொன்னால்
கண்ட படி மிரட்டுபவளே  .

கடுகு  அளவும் காதல் பிடியாது
என்று சொன்னவளே கண்ணா
பின்னா என என்னைத் திட்டிய
சின்னவளே.

கனியாத காதலாக என் காதல்
ஏங்க கண்டும் காணாது போல்
சென்றவளே.

என்ன மாயமடி மந்திரமடி
அந்த மச்சக்காரன் உனக்கு
செய்தானோடி என்னவளே.

முறுக்கு மீசைக் காரன்
முறுக்கித்து நடமாடும் போது
உசாராகி இருக்க வேண்டும்
நானடி இளையவளே.

புரியாமல் போனதடி எனக்கும்
இனிது இனிது காதல் இனிது
என்று காதல் வசனம் உரைப்பாய்
நீ என்று பெண்மயிலே

துணிந்தாயடி துணிந்தாயடி
துணைவன் அவன் என்று
கூறி தூரமாக பறந்தாயே
என் மாமன் மகளே.

கனியாத என் காதல் கனவாக போனதடி
நான் காத்திருந்த பெண் புறாவோ
எனை பாராது அவனோடு ஜோடி போட்டதடி
பெண்ணே துணிந்தாயடி தையிரியமாக
காதல் புரிந்து வென்றாயேடி பிரிவாலே
நான் வருந்தி மது அருந்துகிறேன்
உன்னாலேடி என்னை உதறியவளே.

    

No comments:

Post a Comment