Tuesday 29 October 2019

சுஜிர்த் இரங்கல் பா

😭😭😭😭😭😡😡😡😡😡😡😡
**********************************

துடித்த இதயமெல்லாம்
வெடித்துப் போனதே /
வடித்த கண்ணீரும் 
நிலைத்துப் போனதே/

கண்டு பிடிப்புக்கள் பல
இருந்து என்ன பயன் /
உரிய முறையில் 
கையாளவில்லையே/

உரிய நேரத்தில் அவை 
கை கொடுக்கவும் இல்லையே /
பிராத்தனைகளும் 
வீணாகிப் போனதே/

மூன்று நாட்களுக்குப் பின்
சிதைந்த உடலைக் கொடுத்து/
தொட்டு அழாதே 
அணைத்துப் பிடிக்காதே /

கண்ணாடியின்  ஊடாகவே
பார்த்துக் கொள்ளுங்கள் /
என்னும் எச்சரிக்கையோடு  /
சில நிமிடங்கள் வரை ஒரு தாயின்/ 
கரத்தில்  பிள்ளையைக் கொடுத்தாள் 
அவள் என்ன செய்வாள் /

அட விவரம் தெரியாத 
அரலூசுகளா உடலையாவது /
உரிய நேரத்தில் மீட்டிருந்தால் /
பெற்றவள் தன் பாசத்தை /
பரிதவிப்பை அவளது சோகத்தை/ சொல்லியும் கதறியும் 
கட்டியணைத்தும் கண்ணீராகவே 
வடித்துக் கரைத்திருப்பாள்/

தன்  விழி நீரினிலே பிள்ளையைத் துடைத்திருப்பாள்/
தன்னுடைய வலியைக் 
கொஞ்சமாவது சிதைத்திருப்பாள் /
அதற்கும் வழி இல்லாமல் /
செய்து விட்டீர்களேடா  படுபாவிகளா  /

ஒன்று மட்டும் உண்மை  #குழந்தையின் 
பெயரால் துருப்பிடித்திருந்த /
பல ஒளிப்பதிவு கருவிக்கு வேலை கிடைத்திருந்தது /
கட்டணம் இல்லாமலே பல 
மீடியாக்கள் விளம்பரம் ஆனது /
லைக்  வாங்க ஏங்கும் 
சிலருக்குப் புகைப்படமானது /

கவிதை எழுதக் காத்திருந்தோருக்கு 
நல்ல தலைப்புக்  கொடுத்தது /
இதை மையப் படுத்தி  பலர் 
அவர்களது மூஞ்சை /
உலகிற்குக் காட்டி மகிழ்ந்திட /
ஓர் சூழ்நிலை அமைத்துக் கொடுத்தது  /

உன்னால் யார் யாரோ புகழ் தேட /
நீ மட்டும் நீர் இன்றி ஆகாரம் இன்றி/
படுகுழியில் தாயைத் தேடிய படியே
மரணித்தாயேடா  செல்லம் /

உன் பிஞ்சு நெஞ்சம் எதை /
நினைத்த படி  மூச்சை நிறுத்தியதோ ??  
உலகெங்கும் உனக்காகக் 
கண்ணீர் சிந்தினாலும்/

உன் அன்னையின் கண்ணீரே /
உனக்கான நிரந்தரக் கண்ணீர்  /
இன்னும் சில மாதத்தில் இதை மறந்து
 விடும் உலகமடா/
#குறிப்பாக வல்லரசு நாடு என்று 
வாய் கிழியப் பேசுவோரடா /

சென்று விட்டாய் மீண்டும் /
வந்து விடாதே எப்பிறவியிலும் /
இந்தப்  பொல்லாத உலகத்திற்கு/
உமக்காகக்  கலங்கும் விழிகளில் /
நானும் ஒருத்தியடா 😭😭😭😭

#உன் #ஆத்மா #சாந்தி #காணட்டும்

Thursday 24 October 2019

ஆர் எஸ் கலா

24-10-19

ஏலேலோ ஐலசா
******************

பொங்கும் நுரையுடன் 
ஓங்கும் அலையே/

தாக்காதே மீனவனின்
படகினை  நீயே/

ஏழை மனம் தாங்கிடுமோ
தாயே/

ஐலேசா பாடியே 
ஆழ்கடலோடியே/

அலைகின்றோம் தினமும் 
புயலோடு மோதியே/

இழுப்பு வலையினால்
இடுப்பில் வலியே/

எதற்காக பசி 
போக்கிடத் தாயே /

சந்திக்கும் இழப்புக்களும்
ஏராளம்  தாராளம்  தாயே/

தேர்வுக்கு நன்றிகள் ❤🙏

Wednesday 23 October 2019

கேள்வி தொடுக்கும் மரம் (23-10-19)



இயற்கையான என்னை 
அழித்து /
செயற்கைகளை வளர்க்கும் 
மனிதன்/
உதிரும் இலைகளோடு 
வேரையும் /
மறைத்துக் 
கற்கள் பரப்புகின்றான்/
தானே தனக்கு 
வினையாகின்றான்/
மரங்களை அழித்த பின்னே/
மழை கேட்டு வருந்துகின்றான்/

மருத்துவச் 
செடிகளையும் எரிக்கின்றான் /
பின் நோய் தீர்க்க மருத்துவம் 
தேடுகின்றான்/
அதற்காகப் பெரும் தொகைப் 
பணம்  இழக்கின்றான்/
நாட்டு வைத்தியத்தின் நன்மை அறியாதவன் /
கூட்டு அறிவின் வைத்தியத்துக்கு
அலைகின்றான் /

மழைக்குக் குடையாக /
மழலைக்குத் தொட்டிலாக/
வெயிலுக்கு  நிழலாக/
கோலாட்டத்திற்குக் குச்சியாக/
தாலாட்டக் கட்டிலாக/
கூடி வாழும்  குடிசைக்குக்  
கூரைகளாக/
கூன் விழுந்ததுமே  ஊண்டு 
பொல்லாக/

உயிர் திறந்து விட்டால்  
உமது  உடலுக்குப் பாடையாக/
உன்னுடனே உறவாடி /
உன் இறுதிப் பாதை வரை 
வரும் எங்களை /

ஒரு நொடி நினைத்துப் பார்த்து/ 
இரக்கத்தைக் கொடுத்திட / 
அறுப்பதை நிறுத்திட /
அழிப்பதைப் போக்கிட/
மனிதம் இல்லாமல் போனதே /
ஏனடா ? மனிதா உமக்கு /

தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

Tuesday 22 October 2019

22-10-19

வாழமர தண்டே மரிக்கொழுந்து செண்டே
*******************************************

வலங்காபுரி ஆளும் மகராணி 
மவளே/
கொடாரிக் கொண்டைக் காரி 
மவளே/
மோமணம் உடுத்தும் கோமாளி 
மவளே/
வாடியென் வடகப்பட்டி மாமன் 
மவளே/
காட்டிக்கடி கெண்டைக் கால 
என்னவளே /

முறையோடு உன்னை அள்ளப் 
போறேன்/
நுரையாக நானும் பூசிக்கப் 
போறேன் /
புதுக் கதையெல்லம் சொல்லப் 
போறேன்/
இராத்திரித் தூக்கம் பறிக்கப் 
போறேன்/
புது மயக்கம் கொடுக்கப் போறேன்/

சாரை போலே ஊர்ந்திடப் 
போறேன் /
எறும்பைப் போலே சுவைத்திடப் 
போறேன்/
செவ்வாழைத் தண்டான இடையின் 
மேலே/
மெதுவாக முத்தங்கள்  பதித்திடப்
 போறேன்/
அருகே அமரடி வாழத் தண்டேமரிக்கொழுந்து 
செண்டே/

22-10-19. கை பிடித்த காதல்



கொவ்வைக் கனியென 
சிவந்த இதழ்காரி /
கொஞ்சும் தழிழ் 
பேசும் சேட்டைக்காரி /
உள்ளம்  எடுத்துச் 
சென்ற சிங்காரி /

குள்ளமான மான்  
விழிக் காரி/
வெள்ளமாய்க் காதலைப்  
பெருக்கிய கைகாரி /

சாதி வெறியை 
முறியடித்த மாதுரி/
என்னில் சரி பாதியான 
காந்தாரி /
காதலோடு நான் 
கரம் பிடித்த சுந்தரி/


Monday 21 October 2019

21-10-19 (இயற்கை)



இயற்கை அழிப்பு
செயற்கை வளர்ப்பு/
கொடிய நோயின் /
பிடியில்   மனிதன்/

தேர்வுக்கு  நன்றிகள் ❤🙏

21-10-19 (எட்டாக்கனி)



ஏழைக்குப் பட்டதாரி  
ஆசை என்பதும்/
எளியகுலப் பிறவிக்கு 
அரசியல்  என்பதும்/

பயந்தவனுக்கு மாவீரன் 
பட்டத்து நினைவும்/
யுத்தபூமியில் பிறந்தவனுக்கு 
அமைதியான சூழலும்/

விவசாயிக்கு வறுமைக்கோடு 
நீக்கம் அறிவிப்பும்/
கண்ணிலந்தவனுக்கு ஓவியம்
வரையும் ஆவலும்/

கிணற்றுத்தவளை கடலுக்கு
ஏங்குவது போல் /
 என்றென்றும் நிறைவேறாத 
ஆசைகள் எட்டாக்கனியாக/

21-10-19