Saturday, 19 October 2019
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
நேரம் விரைகிறது /
காலம் கரைகிறது /
நீயும் கூடவே விரைந்து /
விடு விடிவை நோக்கி/
காலம் இறக்கும் முன்னே/
அணைத்துப் பிடி/
நினைத்தவையெல்லாம்
செய்து முடி /
மாண்டு விட்டால் /
அதே ஆண்டு/
மீண்டும் வருவதில்லை/
அந்த அந்த ஆண்டில் /
செய்ய வேண்டிய செயல்களை /
செய்திடவே முயன்று விடு /
உனக்காகக் காலம்
காத்திருக்காது /
அது தன் கடமையை /
முடிக்கும் முன்னே /
உன் கடமையை முடித்து விடு /
பொன்னான வாழ்வு /
என்நாளும் கிடைக்கப் போவதில்லை/
கிடைத்து விட்ட /
நல் வாழ்வை காலமும் நேரமும்/
கடக்கும் முன்னே சிறக்கப் பிடி /
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment