Friday 8 January 2016

தடாகம்

தங்கத் தடாகம்  மங்காது.

எங்கள் தாடாகம் தூங்காது.

தங்கத் தமிழை கொண்டு உலாவும்.

எங்கும் தமிழை கொண்டு நீட்டும்.

வங்கக் கடலையும் நோக்கி நகரும்.

அதை கடந்தும் வளரும்.

ஏங்கும் கவிஞர்களை தாங்கும்.

புகழ் உச்சிக்கு ஏற்ற ஓங்கும்.

தூற்றுவோரின் சொற்களை உரமாக வாங்கும்.

அதை அடியில் போட்டு முயற்சித்து
விழுதாக விழங்கும்.

ஒற்றுமையே தடாகத்தின் பலம்.

வேற்றுமைக்கு இல்லை இங்கே இடம்.

கடும் சொல் கொண்டு சுடு நீர்

ஊற்றும் வேளையிலும்  மலர்ந்து

சிரித்து புகழ் பரப்பி நிக்கும் தடாகம்.

30 ஆண்டை கடந்து இன்றும் கோபுரமாக

உயரத்தையே பார்த்து இருக்கின்றது.

எரிச்சலாக விளையும் துரோக காளான்களை

புரட்சி வார்த்தைகளால் வழித்து எறிந்து.

பணிந்து போகாது துணிந்து சுவர் கட்டி.

வழி மறிக்கும் விச செடிகளை களை எடுத்து.

தெளிந்த ஒடை போல் ஓடும் துடிப்பான

  உறவுகளை வைத்து அழியா நட்சத்திரமாக

மின்னுகின்றது தடாகம்  இன்னும்  இலக்கிய
வானத்திலே.

சேத்தில் மலர்ந்த செந்தாமரை சிவனின்
பாதத்திலே

முயற்சியில் வளர்ந்த தடாகம்
அமச்சரின் பாராட்டிலே.

நிலைத்து விட்டது பத்திரிகையிலே

கவிகளை திரட்டி புயலாக எழுந்து

நந்தவனக் குயிலாக கூவி மலராக
மணம் வீசப் போகின்றது வரும்
புது வருடத்திலே  .

      

No comments:

Post a Comment