(தடாகத்தின் போட்டிக் கவிதை)
மானிடனே உன் மனிதம் எங்கேடா.
மாண்டு விட்டதோ நீ பிறக்கும் 
போதே அங்கேயேடா   இல்லை
உன் மரித்துப் போன மனம் கண்டு
கூடவே வர மறுத்து விட்டதோடா 
பரந்த உள்ளத்திலே சிறந்த மனிதத்தை
இருக்க விடாது பறக்க விட்டு  நீ
உலகயே வலம் வருவது  நியாயமோடா.
கிளை விட்டு கிளை பாயும் குரங்குப் புத்தி
நாடு விட்டு நாடு சென்ற பின்னும்
உன் கூடவே வருவது அநியாயமடா.....///
மனித உடலையும் கூறு போட்டு 
விற்கான் அவனின் அறிவையும்
விலை பேசி விற்கான்  துடிக்கும்
இதயத்தை திருடுகிறான் மாற்றான்
கரத்திலே ஏற்றுகிறான் பணத்துக்கு
வாயை பிளக்கான்  அப்போது எழுந்து
விடவில்லை மனிதம்  விழுந்து விட்டது
பணத்தைக் கண்டு ........//////
பிறர் அறிவை வழித்து எடுத்து
தன் நலத்துக்கு விற்று  தலை
நிமிர்ந்து நடக்கான் ஒருவன்
அவனுக்குப் பெயர்  தலைவன் ....///
உழைத்தவன் வெயர்வை வாடையோடு
அமந்திருக்க. அவன் உழைப்பைக்
கொண்டு சந்தன வாடையோடு 
பவனி வருகிறான் திருடன் ...../////
இரக்க குணம் இல்லா அரக்க
மனிதர்கள் இடத்தில் எங்கே
குடியிருப்பது மனிதம் ......////
பேராசைக் கானின் சிறையில் 
அடைபட்டு விட்டது மனிதம்.
பதவிக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவன்
தட்டி விட்டு விட்டான் மனிதத்தை .....////
வாய் பேச்சை காற்றில் விட்டு 
பணத்தை அள்ளத் துடிப்பவன் 
கனப்பொழுது  மனிதத்தை  கண்டு
கொள்வதுமில்லை  தொட்டு 
விடுவதுமில்லை ......////
மனிதம் என்ற ஒன்று வாழைப்
பழத்தின் தோல் போல் உரித்து
 குப்பையிலே  எறியபட்டு விட்டது
போலி முகங்கள் நிலையானதால்
மனிதனைக் கண்டு மனிதமே 
ஒதிங்கி விடுகிறது ...../////
பத்துக்குப் பத்து வஞ்சம் நிறைந்த 
நெஞ்சம்  அதில் அமர்ந்து 
விட்டது பொறாமை  தான் 
கொஞ்சம்   மனிதம் என்ற வார்த்தைக்கு 
ஏற்பட்டு விட்டது தொடர் பஞ்சம் ....////
உள்ளம் எல்லாம் முள்ளாக 
மாறியதால் நல் உள்ளம் 
தேடி காற்றில் அழையுது 
மனிதம்  
அனாலும்  ஒரு சிலரிடம்
காணப்படுகின்றது  இந்த மனிதம்
மனிதம் நிறைந்தவருக்கு இல்லை
வாழ்விலே நற் பெயர் நிம்மதியான
ஓர் வாழ்கை  மரியாதை  இவையாலே
அவர் வாழ்கையிலே தொல்லை 
மனிதம் மனிதனாக வாழ்வோரை 
மாற்றும் வெற்றிப் படி ஏற்றும் .
என்றோ ஒரு நாள் என்று நம்படா
மனிதனே  நீயும்  ...////
 
  
No comments:
Post a Comment