Wednesday 27 April 2016

பிள்ளைக்கு ஒரு தாலாட்டு

தெப்பக்குளத்து நீரிலே தாமரை மொட்டு.
இந்த அன்னை மடியிலே பிள்ளை சிட்டு.
காற்ரோடு நீரிலே மொட்டாடும்.
இந்த அன்னையின் காலிலே பிள்ளை தொட்டில்
ஆடும் ....ஆரிரீரிரீரிரீரிராரோ ... ஆராரிராரோ...//

ஆழ் கடல் சிப்பிக்குள் முத்து சிருக்கும்
ஆனந்தத்தில் என் பிள்ளை சிட்டுச் சிரிக்கும்.
கடலோரம் நண்டுக்கள் ஓடி விளையாடும்.
அன்னை மடியில் உறங்க வந்த பிள்ளை சிட்டு
கை கால் ஆட்டிவிளையாடும் .. ஆராரோ
.....ஆரிரரோ ..... ஆராரோ ..... ஆராரோ.

வானத்து நிலவு நின்று சிரிக்கும்
அதை வா என்று சொன்னாலும் அங்கே இருக்கும்
அன்னை மடியில் பூத்த நிலவு நித்தம்
சிரிக்கும் தலை முட்டி விளையாடும் போது
முத்தம்  கொடுக்கும் ..... ஆராரோ ...ஆரிரரோ
....ஆராரிரீரிரீரிராரோ .....ஆராராராராரோ.

மாலைப்பொழுதிலே மாலை மலர் கண் விழிக்கும்
இந்த மங்ஙையை அன்னையாக்கிய சின்ன
மலர் கண் உறங்கும் .
புது இதழ் பூத்த மலர் தேன் சுரக்கும்
புன்னகை பூத்த சிட்டின் இதழ் ஓய்வு எடுக்கும்
சுவைத்த பாலின் சுவை நாவில் இருக்கும்
அந்த சுவையோடு நீ உறங்க தாலாட்டும்
அன்னையடா ....ஆராரோ ... ஆரிரீரிரீரிவரோ

               

No comments:

Post a Comment