Thursday 7 April 2016

சிந்தனையே சிறந்தவை

மதத்தைக் குறி வைத்து
மனிதனை நிராகரிக்காதே
மனதை நோகடித்து
மனித நேயத்தைக்  சாகடிக்காதே...\

குறுப்புக்குள் நுழைய
குறுக்கு வழி தேடாதே......\

திறமைக்கு என்றும் உண்டு
திறவு கோல் என்பதை மறவாதே....\

கூர்மைஅம்பும்
கூர்மை  நாக்கும்  ஒன்று
குறி தவறினால்
குற்ற வாளி நீ அன்றோ.....\

காற்று நுழையா ஓட்டையிலும்
காதல் மட்டும் நுழைவது இல்லை....\
பொறாமையும் தான்  இதை மறவாதே
பொறுமை என்றும் தேவை....\

நம்மை  நாமே சிறுமையாக்கி விடலாமோ
நட்பும் பகையும் நிரந்தரம் இல்லை
நன்று உணர்ந்தால் விலகி விடும்
நயவஞ்சகனின் தொல்லை.....\

வெள்ளாட்டுடன் உள்ள கறுப்பு நரியையும்
வெள்ளோட்டத்துடன் ஓடும் கெளுத்தி
மீனையும் அடையாளம் காண்பது
மிகவும் கடிணம் இல்லை.....\

தொடர வேண்டாம் வெறுப்பு
தொட்ட குறுப்பை விட்டு நீயும்
திரும்பு.........\

கார சாரமான கருத்தை நிறுத்தி
கால நேரத்துடன் நீயும்
கையை அசைத்து வெறுப்போடு
இருப்பதை விட்டு மறந்தே
செல்ல விரும்பு.....\ 

    

No comments:

Post a Comment