ஓயாமல்  நாய் குரைத்தால்
அதைப் பார்த்து சிங்கம் 
அஞ்சுமோ..???
பூனைக்கு  எலி பயந்தால்
புலியும் பயந்து நடுங்குமோ??
கொன்றை சேவல் கூவி
பொழுது விடிந்தாலும் அதைக்
கொல்ல உலகம்  மறுக்குமோ...??
காட்டை அழிக்கும் யானைக்கு
தேனின் சுவை தெரியுமோ???
காற்று மரத்தை அசைப்பது போல்
மலையையும் அசைக்க முடியும்
என்று அகந்தை கொள்வது
நியாமோ............\
காய்ந்த சருகு கொடுக்கும்  
ஓசைக்குப்  பனங்காட்டு நரியும்
அஞ்சுமோ....???
போர்  முனையிலே நின்று
போர் இட்ட தமிழ் தாய்  பெற்ற
மகள் அவள் திருடன் பதுங்குவது
கண்டு ஒதிங்கி விடுவாளோ.???
படம் எடுத்தாடும் நாக பாம்புக்கு
கீரிப் பிள்ளையும்  நடுங்குமோ..???
சாட்டை எடுத்துக் களத்தில்
இறங்கிய பின்னே ஆண்
பெண் வேதம் நோக்கலாமோ..???
எடுப்பார்  கைப் பொம்மை
நான் இல்லை  இதை நீ
எடுத்துரைக்கும் விதம்
அநியாயம் அன்றோ..???
தற் பெருமை தேடி தலை
குனியாப் பாவை நான்
உன் புறச்  சொல் கேட்டு
மனங்கலங்கி விடுவேனோ???
திறன் பட வாதாடு திறமை
இருந்தால் 
மறை  முக வேதம்
ஓதி  ஓடி மறைவது ஒரு வீரனுக்கு
அழகு அன்றோ????
கட்டியவளுக்கும் மற்றவளுக்கும்
வேற்றுமை அறியா நீ மகுந்துவம்
படைக்கும்  மா மனிதனோ????
அழைப்புக்கு உரிய வார்த்தை
அறியா நீ புகழ்ச்சி நாடுவதும்
அடுக்குமோ????
தில்  இருந்தால்  பதில் கூறு
இல்லை என்றால் தள்ளியே
நில்லு..........\
 
No comments:
Post a Comment