Friday 25 December 2015

சுனாமி நினைவலை

கடல் மாதா அகோரம் கொண்ட நாள் 

அதன் பசிக்கு பச்சிலம் பாழகனும்
இரையான நாள்

கடல் அலைகள் பொங்கி எழுந்த நாள்

பல இல்லத்தினிலே ஒளி மறைந்த நாள்

கட்டியவனை பறி கொடுத்து இன்றும்
மாது அவள் புலம்பும் வண்ணம் விட்ட நாள்

ஊர் எல்லையைக் கடக்க ஆசைப்பட்டு
கடல் மாதா ஓடிவந்து ஊருக்குள்ளே
நுழைந்த நாள்

காடு மேடு பள்ளம் எல்லாம் தன் கைவசம்
சில நொடி பெற்ற நாள்

மனித மாமிசம் உண்டு சுவைத்த நாள் 

கற்பனையோடு கண் உறங்கியவனை
கண் திறக்காமல் செய்த நாள்

மக்களின் கண்ணீரை இன்று வரை
பரிசாக பெற திரை திறந்த அந்த நாள் 

இமை மூடி திறப்பதற்குள் அரக்கி போல்
அழித்து உண்டு ஏப்பம் விட்ட நாள்

புதுமையான பெயராக சுனாமி  என்னும் 
பெயரை பெற்றுக் கொண்டு இன்றும்
மனிதனை வருத்தி எடுக்கும் நாள்

பால் ஊட்ட வேண்டிய மழலைக்கு உப்பு
நீர் ஊட்டி அழைத்து சென்ற நாள் 

மனித இனம் மறவாத துயரமான நாள் 

இறைவனுக்கு சபிக்க இடம் வகுத்த நாள்

போதும் போதும் அம்மா தாயே அதுவே
என்றும் இறுதி நாளாக இருக்கட்டும்

தாயே தாலாட்டும் அன்னையே ஏழை
எழியோரின் குல தெய்வமே

உல்லாச உலகத்தில் உயர்ந்தவள்
நீ அன்றே

மீண்டும்  அகோரம் 
கொள்ளாதே தாங்கும்
மனம் எமக்கு இல்லை.

சுனாமியில் உயிர் துறந்த
அனைத்து உறவுகளின்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை
வேண்டுவோம்......../////

     

No comments:

Post a Comment