Friday 25 December 2015

எல்லாம் காதல் மாயம்

நிலவு எப்போது உறங்கும்
நட்சத்திரம் எப்போது மயங்கும்
மேகம் எப்போது ஓய்வு எடுக்கும்
வீசும் தென்றல் எப்போது திசை
மாறும் என்று என்னிடம் கேளு.

ஏன் என்றால் உன் எண்ணத்தை
தட்டி அதனுடன் விளையாடியவாறு
உறங்காமல் விழித்திருப்பவள்
நான் அல்லவா.

கூவும் குயில் எந்த நேரத்தில் இசை
அமைக்கத் தொடங்கும்
திருட்டுக் காகம் எப்போது கூடு விட்டுக்கிளம்பும்
போர்த்திய மொட்டு எப்போது போர்வை திறக்கும்
தரையில் உலாவும் தவளை மீண்டும் குளத்தில்
எப்போது துள்ளும் என்று என்னைக் கேளு.

ஏன் என்னால் உன்னால் தூக்கம் தொலைத்து
தனிமையில் உலாவுவதும் நான் அல்லவா
என் தனிமைக்குத் துணை இந்த இயற்கை
அல்லவா.

உன் எண்ணம் என்னை எழுப்ப
உன் மோகம் என்னை உசுப்ப
உன்மேல்  நான் கொண்ட காதலோ
ஓயாது துடிக்க
நானே பாதம் போகின்ற போக்கிலே நடக்க
காணாத காட்சி எல்லாம் கண்டும் மனம்
இழந்தே இருக்க.

கனவில் வந்து  வரம் தரும் உன்
முகமும் வந்து செல்ல மறுப்பதும்
ஏனோ என்னை மயக்கி விட்ட
மன்னவரே.

No comments:

Post a Comment